பாக்கியலட்சுமி சீரியலில் கோபியிடம் ராதிகா சபதமெடுக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெற்றுள்ளது.
எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில் ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார்.
அதுமட்டுமல்லாமல் பாக்யா குடும்பம் கொடைக்கானலுக்கு டூர் போக அங்கே தனது ஹனிமூனுக்காக கோபி-ராதிகா வருகை தருகின்றனர். ஆனால் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் பாக்யா கை ஓங்க ராதிகா டென்ஷனாகிறார். இவர்களை சமாளிக்க முடியாமல் கோபி திணறுகிறார். இப்படியான நிலையில் கடந்த ஒரு வார காலமாக தற்போது பாக்கியலட்சுமி - பாண்டியன் ஸ்டோர்ஸ் மகாசங்கமம் என காட்சிகள் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் அது முடிவடைந்தது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
குடும்பத்தை ஏமாற்றிய ஜெனி
ஹோட்டலில் வாங்கிய சாப்பாடை தான் சமைத்ததாக கூறி ஜெனியும், செழியனும் குடும்பத்தினருக்கு பரிமாறுகின்றனர். உண்மை தெரிந்த பாக்யா, எழில் சிரித்துக்கொண்டே சாப்பிட்ட சாப்பாடு நன்றாக இருப்பதாக இனியா, ஈஸ்வரி இருவரும் கூறுகின்றனர். ஆனாலும் ஹோட்டல் சாப்பாடு மாறி இருக்கே என சந்தேகம் எழ செழியனும், ஜெனியும் சமாளிக்கின்றனர்.
ராதிகா வீட்டில் கஷ்டப்படும் கோபி
ராதிகா வீட்டில் தனது அம்மா, மயூ, அண்ணன் சந்துருவிடம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மாடியில் கோபி குளித்துவிட்டு வெளியில் துண்டு கேட்டு ராதிகா..ராதிகா..என கத்துகிறார். ஆனால் அவர் வருவதாக இல்லை. இதனால் தன் வேஷ்டியால் தலையை துவட்டி கொண்டு டிரஸ் மாற்றி விட்டு கீழே வந்து பார்க்கிறார். அங்கு ராதிகா அம்மா தனது ஹனிமூன் போன கதையை பேசுகிறார்.
நான் ஒருத்தன் இங்க இருக்கேன். காஃபி வேணுமான்னு கேட்கக்கூட ஆள் இல்ல என புலம்புகிறார். அப்போது சந்துரு டீ கொண்டு வர சொல்ல அவரது அம்மாவிடம் கோபி காஃபி தான் வேணும் என கேட்கிறார். ஆனால் டீ வருகிறது. எனக்கு டீ பிடிக்காதுன்னு ராதிகாவுக்கு தெரிஞ்சும் எதுவும் கேட்க மாட்டேங்குறாளேன்னு நினைக்கும் போது பாக்யா கேட்கும் போதெல்லாம் காஃபி கொடுப்பதை நினைத்து பார்க்கிறார்.
சபதம் எடுத்த ராதிகா
பின்னர் ரூமுக்குள் வந்தும் ராதிகா பேசாமல் இருக்கிறார். ஏன் இப்படி இருக்க என கோபி கேட்க, அப்போ கொடைக்கானல்ல இருந்த எனக்கு எப்படி இருந்திருக்கும். ஒவ்வொருத்தரா வந்து கல்யாணத்துக்கு முன்னாடி, பின்னாடி என அசிங்கப்படுத்திட்டு போய்ட்டாங்க. நான் என்ன தப்பு பண்ணேன். உங்கள உங்களை பொண்டாட்டி கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு வந்தேன். நீங்க தானே சட்டப்படி வந்தீங்க.
எல்லாரும் பாக்யாவை ஒழுக்கமானவள்ன்னு சொல்றாங்க. நான் ஒழுக்கம் இல்லாதவளா என கேட்க ஏன் இப்படி பேசுகிறாய் என ராதிகாவை கோபி சமாதானப்படுத்துகிறார். உடனே என்னை அசிங்கப்படுத்துற எல்லார் முன்னாடியும் நல்லபடியா வாழ்ந்து காட்டணும். எனக்கு அதைப் பண்ணுங்க என சபதம் எடுத்துவிட்டு செல்வதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.