தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம் (Idhayam Serial). இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மாலை கழட்டிய துரை மட்டன் எடுத்து வந்து தூங்கிக் கொண்டிருக்கும் பாரதி எழுப்பி சமைக்க சொல்லி அவளை தொட்டு தடவி டார்ச்சர் செய்கிறான். 


சாப்பாடு பரிமாறும் போது பாரதியின் கையை பிடித்து இழுத்து அத்துமீற பாரதி ரூமுக்குள் சென்று கண்கலங்கி அழுகிறாள். இதை பார்த்த தமிழ் பாப்பா நீ வீட்ல இருக்காதாமா ஆஃபீஸ்க்கு போயிடு என்று சொன்னது பாரதியும் அதுதான் சரி என்று முடிவெடுக்கிறாள். 


இங்கே ஆபீஸில் புதிய அக்கவுண்டண்ட் எடுப்பதற்காக இன்டர்வியூ சென்று கொண்டிருக்க பாரதி ஆபீஸ் வருகிறாள். நேராக அவளது சீட்டில் சென்று உட்கார லதா அப்படி எல்லாம் திரும்ப வந்து வேலை பார்க்க முடியாது இன்டர்வியூ அட்டென்ட் பண்ணிட்டு தான் வரணும் என்று சொல்கிறாள். 


பிறகு லதா ஆதிக்கு போன் போட்டு “ஒரு முக்கியமான ஆள் வந்து இருக்காங்க, வெளியே வந்து பாருங்க” என்று சொன்னதும், பாரதியை பார்த்த ஆதி சந்தோஷப்படுகிறான். உள்ளே போன பாரதி இன்டர்வியூ அட்டென்ட் பண்ண, ஆதி “செலெக்டட் யு ஆர் அப்பாயிண்ட்டட்” என்று சொல்கிறான். 


பாரதி எழுந்து வரும்போது அவளை கூப்பிட்டு வைத்து “இதுக்கு முன்னாடி இருந்தவங்க ரொம்ப கோபப்படுவாங்க, ஆனா நீங்க அப்படி இருக்கக் கூடாது, அவங்க தினமும் எனக்கு லன்ச் செஞ்சு எடுத்துட்டு வருவாங்க, நீங்களும் அப்படி எடுத்துட்டு வரலாம்” என்று ட்விஸ்ட் கொடுக்க பாரதி பதில் பேசாமல் எழுந்து வருகிறாள். 


அடுத்ததாக வீட்டுக்கு போன ஆதி அம்மா சாரதாவுக்கு பிறந்தநாள் என்ன செய்வது என தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறான். பிறகு தமிழ் பாப்பா போன் பண்ணி பேச அவளிடம் அம்மாவுக்கு பிறந்தநாள் என்ற விஷயத்தை சொல்ல தமிழ் அதை பாரதியிடம் சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்புடன் இதயம் சீரியல் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.