பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss Season 7 Tamil) நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்ற தினேஷ் இந்த சீசனில் அர்ச்சனாவுக்குப் பிறகு அதிக ஆதரவுகளைப் பெற்ற வைல்டு கார்டு போட்டியாளராக விளங்கினார்.


ரச்சிதாவுடனான பிரிவு




சின்னத்திரை நடிகரான தினேஷ் (Dinesh), பிரிந்திருக்கும் தன் மனைவி ரச்சிதாவுக்காக தான் பிக்பாஸ் சீசன் 7இல் கலந்துகொண்டதாகவும், பிக்பாஸ் ட்ராஃபியை வென்று அவரிடம் கொடுப்பதே தன் லட்சியம் என்றும் இந்நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே சொல்லி வந்தார்.


ஆனால் முதல் சில வாரங்களில் பெற்ற வரவேற்பைத் தக்க வைக்க தினேஷ் தவறிவிட்டார். ஃபினாலே நாள் வரை சென்ற தினேஷ் 4ஆம் இடம் பிடித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். மேலும் தான் நிறைய ஆசை, கனவுகளுடன் பிக்பாஸில் கலந்துகொண்டதாகவும், கடுமையாகப் போட்டியிட்டே தான் வெளியேறியுள்ளதாகவும் தினேஷ் இறுதி மேடையில் கமல்ஹாசனிடம் தெரிவித்தார்.


'முயற்சி பண்ணேன் ஆனா..'


இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் கடந்த சில நாள்களாக தினேஷ் யூட்யூப் சேனல்களுக்கு தினேஷ் பேட்டியளித்து வருகிறார். இதில் தனது பிரிந்திருக்கும் மனைவி ரச்சிதா பற்றியும் பிக்பாஸ் பற்றியும் தினேஷ் மனம் திறந்து பேசியுள்ளதாவது:


“கல்யாண வாழ்க்கையில் ஒரு பிரிவு எனக்கும் ரச்சிதாவுக்கும் இருந்தது. அவங்களும் அனைவருக்கும் தெரிந்த  ஒரு செலிப்ரிட்டி தான். ஒரு செலிப்ரிட்டி வாழ்க்கையில்  இருந்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் பிரிவு வரும்போது அதைக் கையாள்வது ரொம்ப கஷ்டம். அதனால் நான் அந்த விஷயத்தை சரிபண்ண நிறைய முயற்சிகள் எடுத்தேன். அவரது குடும்பத்தினரும் எடுத்தார்கள். நானும் எடுத்தேன்.


‘இதுக்காக கோப்பைய வெல்ல நினைச்சேன்'




ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பெரிய கேப் கிடைக்கும் இல்லையா.. அப்ப ஒரு மைண்ட் செட் ஆகிடும். அந்த மைண்ட்செட்ட தாண்டி அந்த விஷயத்தை சரிசெய்ய ஒரு விஷயம் நடக்கணும். அந்த தருணமா நான் பிக்பாஸ நினைச்சேன். 


இந்த முயற்சி பலனளிக்குமானு தெரியாது. நாம இத ட்ரை பண்ணுவோம்னு நினைச்சேன். அப்பா, அம்மா, மனைவி, பிள்ளைகள்னு நான்கு உறவுகளில் எந்த பிரச்னை நடந்தாலும் அதுல முழு முயற்சி செய்யணும் அப்படிங்கறது என் பாலிசி. பிக்பாஸ் நிகழ்ச்சி ரச்சிதாவுக்கு ரொம்ப பிடிக்கும். முந்தைய சீசன்கள பாத்துட்டு வீடியோக்கள் பதிவிடுவாங்க. போன சீசன்ல 90 நாள் வரை இருந்துட்டு வந்தாட்டங்க. அதனால பிக்பாஸ் கோப்பைய வின் பண்ணி ரச்சிதாவிடம் கொடுத்தால் அது உத்வேகமா இருக்கும்னு நினைச்சேன். அத தவிர வேற எனக்கு எந்த குறிக்கோளும் இல்லை. இதுக்கு அப்பறம் வேற அவருடன் பேசும் சந்தர்ப்பம் அமையுமானு தெரியல. 


‘என்னால இதை செய்ய முடியல’


அவங்க அதே ஸ்டேண்ட்ல தான் இருப்பாங்க. அதனால் இதுக்கு அப்றம் எப்படி இதைக் கொண்டு செல்வது என எனக்குத் தெரியவில்லை. இப்போதைக்கு அவங்க செட் செய்திருக்கும் வேலிக்குள் என்னால் செல்ல முடியவில்லை.


விசித்ராவுடன் இப்படி சண்டை வரும் என நான் எதிர்பார்க்கவில்லை. விசித்ரா அழகா சூப்பரா ஒரு கேம் விளையாடினாங்க. நான் நானா இருந்தது அவங்களுக்கு ஒரு தடையா இருந்ததா எனத் தெரியவில்லை. நான் கேப்டனான இருந்தபோது என்னை என் வேலையை செய்ய விடாமல் அவர் தடுத்ததால் தான் சண்டை. மாயா - பூர்ணிமாவிடம் உட்கார்ந்து இந்த மனுஷன என்ன பண்ணலாம் என பேசினதா அவங்களே சொன்னாங்க. விசித்ரா சொல்வதனால் நான் அப்படி ஆகிவிட மாட்டேன்” எனப் பேசினார்.