பிக்பாஸ் தமிழ் 7:


கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் 7ஆவது சீசன் 25-வது நாளை எட்டியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.  மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் வீட்டில் தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். முதல் வார எலிமினேஷனில் அனன்யா ராவ் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து எழுத்தாளர் பவா செல்லதுரை  தன் விருப்பத்தின் பேரில் பிக்பாஸ் வீட்டில் இந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான விஜய் வர்மா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.


பிரதீப் சொன்ன வார்த்தை:


தற்போது பிக்பாஸ் வீட்டில் ஜோவிகா, மாயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி, விசித்திரா, யுகேந்திரன், கூல் சுரேஷ், நிக்ஸன்,  விஷ்ணு, சரவண விக்ரம் உள்ளிட்டவர்கள் நடுவில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. பூர்ணிமா இந்த வார கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஓபன் நாமினேஷன் இந்த வாரம் தொடங்கியதில் பலரும் மாயா, பிரதீப், ரவீனா மற்றும் மணியை நாமினேட் செய்துள்ளனர். 


இந்நிலையில், இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ஜோவிகா கண் கலங்கி அழுதிருக்கிறார். பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் சக போட்டியாளர்கள் இருவரின் வீட்டில் இருந்து அனுப்பப்பட்ட இரண்டு வீடியோக்களை பார்த்து, அதில் யாருடைய வீடியோ பிடித்திருந்தது என நினைப்பவருக்கு லைக்கும், பிடிக்காதவருக்கு டிஸ்லைக்கும் கொடுக்க வேண்டும்.  அதில் பிரதீப், ஜோவிகா வீட்டில் இருந்து அனுப்பப்பட்ட வீடியோக்களை பார்த்துவிட்டு வெளியே வந்து ஜோவிகாவிடம் லைக் கொடுத்திருக்கிறார்.


கண் கலங்கிய ஜோவிகா:


பின்னர், அவர் பேசுகையில், "எனக்கு வனிதாவை ரொம்ப பிடிக்கும். நான் வனிதாவை பார்ப்பதற்காக அங்கே போனேன். ஆனால், அங்கு திரையில் வந்தது வனிதா பொண்ணுதான். அதனால், உனக்கு நான் லைக் கொடுக்கிறேன்" என்று அவர் சொல்லி இருக்கிறார். இதற்கு ஜோவிகா, கண்கலங்கி அழுது இருக்கிறார். இந்த காட்சிகள் அனைத்தும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 






மேலும், மணி வீட்டில் இருந்து அனுப்பப்பட்ட வீடியோவை ரவீணா பாத்துவிட்டு வெளியே வந்து மணிக்கு டிஸ்லைக் கொடுத்து "கேம்முக்கு ஸ்டாட்டர் தேவை" என்று விளக்கம் கொடுத்தார். பின்னர், அவர்கள் தனியாக அமர்ந்து பேசுகையில், "நீ உன் மனசாட்சிப்படி  விளையாடல என்று சொல்ல, அதற்கு ரவீணா என் மனசாட்சிக்கு என்ன தோணுதோ அதைத்தான் நான் விளையாடினேன். என் மனசாட்சிக்கு என்ன தோணுதோ அப்படியே செஞ்சேன்" என்று கூறுகிறார். இப்படியாக இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.