பிக்பாஸ் தமிழ் 7:
கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் 7ஆவது சீசன் 25-வது நாளை எட்டியுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் வீட்டில் தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். முதல் வார எலிமினேஷனில் அனன்யா ராவ் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து எழுத்தாளர் பவா செல்லதுரை தன் விருப்பத்தின் பேரில் பிக்பாஸ் வீட்டில் இந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான விஜய் வர்மா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
தற்போது பிக்பாஸ் வீட்டில் ஜோவிகா, மாயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி, விசித்திரா, யுகேந்திரன், கூல் சுரேஷ், நிக்ஸன், விஷ்ணு, சரவண விக்ரம் உள்ளிட்டவர்கள் நடுவில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. பூர்ணிமா இந்த வார கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஓபன் நாமினேஷன் இந்த வாரம் தொடங்கியதில் பலரும் மாயா, பிரதீப், ரவீனா மற்றும் மணியை நாமினேட் செய்துள்ளனர்.
கொளுத்திபோட்ட பிக்பாஸ்:
பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்தே ரவீணாவின் நிழல் போன்று மணி இருப்பதாக வீட்டில் இருப்பவர்கள் சொல்லிக்கொண்டு இருந்தனர். எப்பொழுது பார்த்தாலும் இருவரும் ஒன்றாகவே இருக்கிறார்கள் என்றும் இதனால் இருவரின் ஒரிஜினாலிட்டி வெளியே தெரிவது இல்லை என்று பல காரணங்கள் சொல்லி வாரம் வாரம் மணி ரவீனாவை நாமினேட் செய்து வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில், இன்று வெளியான இரண்டு ப்ரோமோக்களிலும் மணி, ரவீணாவுக்கு இடையே சண்டை தீவிரம் அடைந்திருக்கிறது.
முதல் ப்ரோமோவில், பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் சக போட்டியாளர்கள் இருவரின் வீட்டில் இருந்து அனுப்பப்பட்ட இரண்டு வீடியோக்களை பார்த்து, அதில் யாருடைய வீடியோ பிடித்திருந்தது என நினைப்பவருக்கு லைக்கும், பிடிக்காதவருக்கு டிஸ்லைக்கும் கொடுக்க வேண்டும். இதில் ரவீணாவுக்கு மணி மற்றும் பிரதீப் வீட்டில் இருந்து வந்த வீடியோவை ஒளிபரப்பி இருந்தனர். இதில் பிரதீப்பின் வீடியோ பிடித்ததாக கூறி அவருக்கு லைக் கொடுத்தார் ரவீணா. பின்னர், மணிக்கு டிஸ்லைக்கும் கொடுத்ததால் கடுப்பாகி சண்டை போட்டுள்ளது போன்று ப்ரோமோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
காதல் முறிந்ததா?
இதனை அடுத்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில், “பிரதீப் என்ன நினைக்கிறாங்களே அதை செய்றாங்க. அது எனக்கு நியாயமா இருக்கு. அதனால், நான் லைக் கொடுக்கிறேன்" என்றார் ரவீணா. இதனால் கடுப்பான மணி, ”இன்னொருத்தன் கிட்ட வச்சு என்னை தோற்கடிக்காத. அவ்வளவு தான் சொல்லுவேன். அதுக்கு நீ என்ன பார்க்காமலயே இருந்திருக்கலாம். எனக்கு இது பிடிக்கல. அவ்வளவு தான் என்றார்" மணி. அதை கேட்ட ரவீணா, "நீங்க நான் சொல்வதை புரிந்து கொள்ளவில்லை" என்று கூறியுள்ளார்.
மணி-ரவீனா பேசிக் கொண்டிருந்ததே பார்த்த பூர்ணிமா, ”ரவீணா கேமை சரியாக விளையாடியதாக பாராட்டி பேசியதோடு, மணி மூளையே இல்லாத முட்டாப்பய" என சாடி இருக்கிறார். இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள் மணியும், ரவீணாவும் பிரேக் அப்பா என பல கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த பிக் பாஸ் சீசனில் காதல் ஜோடியாக வலம் வந்த ரவீணாவுக்கும், மணிக்கும் தற்போது சண்டை பூதாகரமாக வெடித்துள்ளது.