சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் இன்றைய (அக்.25) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.  ஆதி குணசேகரனாக எதிர்நீச்சல் தொடரில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு பிறகு அவர் இடத்தில் எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி என்ட்ரி கொடுத்தார்.


 



வேல ராமமூர்த்தி எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்த முதல் நாள் மிகுந்த பில்ட் அப்புடன் சரவெடி எல்லாம் வெடித்து வரவேற்றனர். அதனை தொடர்ந்து இரண்டு மூன்று எபிசோடுகளில் மட்டுமே தலைகாட்டிய வேலராமமூர்த்தியை போலீஸ் கைது செய்து விட்டதாக கதைக்களத்தை மாற்றி அமைத்து அவரை கண்ணிலே காட்டாமல் வைத்து இருந்தனர்.


திருவிழாவுக்கு ஆதி குணசேகரனாக மீண்டும் வேல ராமமூர்த்தி வருகை தருவார் என கதைக்களத்தை நகர்த்தி வந்த சூழலில், இன்றைய எபிசோடில் மீண்டும் ஆதி குணசேகரனாக வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார் வேல ராமமூர்த்தி. 


 



வீட்டுக்கு வந்த குணசேகரனை வரவேற்கிறார் விசாலாட்சி அம்மா. தர்ஷினி அவர்க்குக்கு காபி எடுத்து வந்து கொடுக்கிறாள். தர்ஷனிடம் "என்னிக்கு உங்க ஆத்தா பேச்சை கேக்க ஆரம்பிச்சியோ, அன்னிக்கே உனக்கு புத்தி மரண்டு போச்சு" என குணசேகரன் சொல்ல, தர்ஷன் அவரை பார்த்து முறைக்கிறான். அதைப் பார்த்த குணசேகரன் "என்னடா இவன் இப்படி முழிக்கிறான்" என ஞானத்திடம் கேட்க, "அவன் முழிக்கல அண்ணன் முறைக்கிறான்" என்கிறான் ஞானம். "முறைக்கிறானா அவனோட வளர்ப்பு அப்படி" என்கிறார்.


 


 
 


ஜான்சி ராணி சார் ஜன்னல் வழியாக தண்ணீர் பாட்டிலை தூக்கி எறிகிறாள். அதை பார்த்த ரேணுகா "ச்சீ... ரோட்ல தூக்கி போடுற" என கேட்க "எங்கடி போட சொல்ற?" என கத்துகிறாள் ஜான்சி ராணி. மறுபக்கம் கதிர் யாரோ ஒரு பெண்ணோடு கடலை போட்டு கொண்டு இருக்கிறான். அப்போது கரிகாலன் வந்து "மாமா லேட் பண்ணா பிளான் டைவர்ட் ஆகிவிடும்" என சொல்ல "எனக்கு எல்லாம் தெரியும். நீ பொத்திகிட்டு போடா.." என கரிகாலனை அங்கிருந்து விரட்டிவிடுகிறான் கதிர். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.  



திருவிழாவையும் அப்பத்தா நடத்த போகும் பன்க்ஷனை சுற்றியும் கதைக்களம் தற்போது நகர்ந்து வருகிறது. இதில் அப்பத்தாவையும் ஜீவனந்தத்தையும் குறி வைத்து போட்டு தள்ள திட்டம் தீட்டியுள்ளனர். உண்மையில் இந்த திருவிழாவில் யாருடைய உயிர் பலியாக போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். 


சில வாரங்களாக ஜவ்வு போல இழுத்து வரும் எதிர்நீச்சல் தொடர் மீண்டும் விறுவிறுப்பாகுமா? என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.