பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா வீட்டுக்கு சென்று தான் பேசியதாக ஈஸ்வரி ராமமூர்த்தியிடம் சொல்லும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 


ரசிகர்களை கவர்ந்த பாக்கியலட்சுமி 


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில், பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த சீரியலின் ஹீரோ கோபி, குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல், அவரோடு சகித்து கொண்டு வாழ்ந்த நிலையில் அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது.


இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில், கடந்த சில மாதங்களாக  எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார்.


அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர்  வீட்டில் திட்டியதால் கோபியுடன் இனியா செல்கிறார். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம். 


விடாமல் வம்பிழுக்கும் ராமமூர்த்தி 


சாப்பாடு தயார் செய்து விட்டு ராமமூர்த்தியை ராதிகா அழைக்க, அவரோ காது கேட்காமல் இருப்பது போல நடிக்கிறார். இதனால் கடுப்பாகும் அவர் கோபியிடம் சொல்ல, அவர் சென்று ராமமூர்த்தியை அழைத்து வருகிறார். சப்பாத்தியை வறட்டிப் போல இருப்பதாக குறை சொல்லி பாக்யா வீட்டுக்கு ராமமூர்த்தி சாப்பிட செல்கிறார். இதனால் ராதிகா டென்ஷனாக, கோபி ஏதேதோ சொல்லி அவரை சமாதானப்படுத்துகிறார். 


பாக்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த எழில் 


அம்ரிதாவை தேடி எழிலும், அவரது நண்பர் சதீஷூம் அவரின் சொந்த ஊருக்கு செல்கின்றனர். ஆனால் இரவு நேரமாகிவிட்டதால் காலையில் தேடிக் கொள்ளலாம் என நினைக்கும் போது பாக்யாவிடம் இருந்து போன் வருகிறது. தான் அமிர்தாவை பார்க்க வந்திருப்பதாக சொல்ல, அவ சென்னை வந்துட்டாளான்னு அப்பாவியாக பாக்யா கேட்கிறார். ஆனால் தான் அமிர்தாவின் சொந்த ஊருக்கு வந்திருப்பதாகவும், தன்னால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை எனவும் எழிலும் தன் தவிப்பை சொல்ல, பாக்யா சமாதானம் சொல்கிறார். 


உண்மையை சொன்ன ஈஸ்வரி 


தான் அமிர்தா வீட்டுக்கு போன கதையை ராமமூர்த்தியிடம் ஈஸ்வரி சொல்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சியையும் அவருக்கு மேலும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக வர்ஷினி வீட்டில் போய் சம்பந்தம் பேசியதையும் சொல்கிறார். இது சரியாக வருமா என ராமமூர்த்தி யோசிக்கும் நிலையில் பாக்யா அங்கு வருகிறார். அவரிடம் எதுவும் தெரியாதது போல ராமமூர்த்தி நடிக்கிறார். 


தவிக்கும் எழில்


அமிர்தாவின் மாமனார் பெயரை சொல்லி காலையில் ஊரில் விசாரிக்கும் எழிலுக்கு, அப்படி யாரும் இங்கே இல்லை என்ற பதிலே கிடைக்கிறது. இதனால் அப்செட்டாகும் அவர் தேடி அலையும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.