பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவுக்கு தெரியாமல் ஈஸ்வரி, செழியன் வர்ஷினி வீட்டிற்கு சென்று பேசும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெற்றுள்ளது. 


ரசிகர்களை கவர்ந்த பாக்கியலட்சுமி 


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில், பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த சீரியலின் ஹீரோ கோபி, குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல், அவரோடு சகித்து கொண்டு வாழ்ந்த நிலையில் அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது.


இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில், கடந்த சில மாதங்களாக  எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார்.


அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர்  வீட்டில் திட்டியதால் கோபியுடன் இனியா செல்கிறார். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.






அழுது புலம்பும் எழில் 


வீட்டில் ஈஸ்வரியும், செழியனும் ரகசியமாக வர்ஷினி வீட்டுக்கு செல்வது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது எழில் வர பாக்யா அவரை அழைத்துக் கொண்டு அமிர்தா வீட்டுக்கு செல்கின்றார். அதேசமயம் ஈஸ்வரி, செழியன் இருவரும் வர்ஷினி வீட்டுக்கு செல்ல, கோவிலுக்கு செல்வதாக பொய் சொல்லி கிளம்புகின்றனர். இதனைப் பார்க்கும் செல்வி சந்தேகப்பட்டு விசாரிக்க, ஈஸ்வரி மழுப்புகிறார். இதனால் ஜெனிக்கும் ஈஸ்வரி, செழியன் மீது சந்தேகம் ஏற்படுகிறது. 


இதற்கிடையில் அமிர்தா வீடு பூட்டியிருக்க, அக்கம் பக்கத்தில் இருப்பவரிடம் பாக்யா விசாரிக்கிறார். இதில் அந்த வீட்டில் அனைவருமே வீட்டை காலி செய்து விட்டு ஊருக்கு சென்று விட்டதாக கூற பாக்யா அதிர்ச்சியடைகிறார்.எழில் கதறி அழுகிறார். அவரை சமாதானப்படுத்தி பாக்யா வீட்டுக்கு அழைத்து செல்கிறார். 


வர்ஷினிக்கு ஓகே சொன்ன ஈஸ்வரி 


மறுபக்கம் ஈஸ்வரி, செழியன் இருவரும் வர்ஷினியின் அப்பாவான தயாரிப்பாளரை பார்த்து எழிலுக்கு கல்யாணம் சம்பந்தம் பேசி உறுதியளிக்கிறார். அப்போது கோபி குறித்த உண்மையை ஈஸ்வரி சொல்லாமல் மறைக்கிறார். எழிலும் இந்த கல்யாணத்துக்கு சம்மாதிப்பார் என இருவரும் வர்ஷினி அப்பாவிடம் உறுதியளிக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வரும் பாக்யாவிடம் ஜெனியும், செல்வியும் ஈஸ்வரி, செழியன் மறைமுகமாக ஏதோ வேலை பார்ப்பதாகவும், அது என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும் என தெரிவிக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.