பாக்கியலட்சுமி சீரியலில் இனியா மீண்டும் பாக்யாவிடம் செல்ல முடிவெடுக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 


எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த சீரியலின் ஹீரோ கோபி, குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக  எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. 


குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர் நடக்கும் காட்சிகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம். 


எழிலுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி 


அம்ரிதா வீட்டுக்கு செல்லும் எழில் தயங்கி தயங்கி உள்ளே செல்கிறார். அவரை வரவேற்றாலும் அம்ரிதாவின் பெற்றோர் முகம் கொடுத்து பேசாமல் உள்ளனர். எனக்கு என்ன நடக்குன்னே புரியல. அமிர்தாவும் என்கிட்ட பேச மாட்டுகாங்க. அவங்க இருக்காங்களா என எழில் கேட்க, அவ ஊருக்கு போய்ட்டா என அம்ரிதா அம்மா சொன்ன பதிலை கேட்டு அவர் அதிர்ச்சியடைகிறார்.


எப்ப மறுபடியும் வருவாங்க என படிக்கிறதுக்காக வந்தா. இப்ப அது முடிஞ்சி போச்சி. நாங்களும் கிளம்பலாம்ன்னு இருக்கோம் என அம்ரிதா அப்பா சொல்ல, நான் இருக்கேன் நீங்க ஏன் போகணும் என எழில் கேட்கிறார். ஆனால் கானல் நீரை நம்பி இருக்க முடியாது என அம்ரிதா அப்பா கூற, எழில் வருத்தத்தோடு அங்கிருந்து செல்கிறார். 


இனியாவுக்காக வருத்தப்படும் பாக்யா


பாக்யா வீட்டில் சிக்கன் சமைக்கும் நிலையில் இனியாவுக்கு ரொம்ப பிடிக்குமே என அவளை நினைத்து வருத்தப்படுகிறார். அப்போது கோபி வீட்டுக்கு சென்ற ராமமூர்த்தி அங்கு சாப்பிட வருகிறார். அவரிடம் இனியா பற்றி பாக்யா கேட்டுக்கொண்டே இருக்க, ராமமூர்த்தி அவ அங்க நல்லா தான் இருக்கா. கோபி அவளோடவே இருந்து பார்த்துட்டு இருக்கான் என சொல்கிறார். உடனே பாக்யா இனியாவுக்கு சப்பாத்தியும், சிக்கனும் கொடுத்து விடுகிறார். இனியாவை சந்திக்கும் ராமமூர்த்தி சாப்பிட சொல்லி கொடுக்க, சாப்பிட்டவுடன் அது அம்மா செய்தது என அவளுக்கு தெரிய வருகிறது. 


அம்மா எனக்காக கொடுத்தாங்களா என சொல்லிக்கொண்டே, அம்மா பாவம்ல என இனியா கூறுகிறார். எனக்கு அவங்களை பார்க்கணும் போல இருக்கு. ஆனால் அப்பா என்ன சொல்வாரோ என கூற, நீ எப்படி வந்தியோ அப்படியே தான் போகணும் என ராமமூர்த்தி தெரிவிக்கிறார். 


அதிர்ச்சியடையும் கோபி 


ஹாலில் ராமமூர்த்தி மற்றும் இனியா தூங்க செல்ல, ராதிகா இனியாவை பெட்ரூமில் படுக்க சொல்லுமாறு கோபியிடம் தெரிவிக்கிறார். ஆனால் அது சரி வராது என கூறிவிட்டு கோபி ஹாலில் தூங்க செல்கிறார். அங்கு இனியா கோபியிடம் நான் திரும்பவும் நம்ம வீட்டுக்கு போறேன். அம்மா பாவம் என கூறுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் கோபி நான் பாவம் இல்லையா. எனக்கு உன்ன விட்டா யாரு இருக்கா. நீதான் எல்லாமே என தெரிவிக்கிறார். மேலும் . இனிமே என்னை விட்டு போக மாட்டேன்னு சத்தியம் பண்ணுமாறு கோபி கேட்க, இனியாவும் சத்தியம் பண்ணுவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.