அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் அவமானத்தால் அன்னம் தற்கொலைக்கு முயலும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 


விறுவிறுப்பாக செல்லும் சீரியல் 


தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர்.


தன் அம்மாவின் கனவுக்காக வாத்தியார் வேலை செய்வதாக சொல்லி பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் பியூனாக இருக்கும் செந்திலை வாத்தியார் என நினைத்து காதல் கொள்கிறார் அமுதா. அந்தக்காதல் திருமணம் வரை சென்ற நிலையில், செந்திலை பற்றிய உண்மை தெரிய வருகிறது. இதன் பிறகு இந்த சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்பது விறுவிறுப்பாக செல்வதால், ரசிகர்களின் ஃபேவரைட் சீரியலாக அமுதாவும் அன்னலட்சுமியும் உள்ளது.  


முன்னதாக அமுதா செந்திலின் அப்பா கதிரேசன் வேலை பார்த்த பள்ளிக் கூடத்திற்கு சென்று அவருக்கு நினைவிடம் அமைக்க சொல்கிறாள். அங்கிருக்கும் ஆசிரியர் பழனிக்கு போன் செய்து விவரத்தை சொல்கிறார். உடனே பழனி இதனை தடுக்க திட்டம் போடுகிறான். பள்ளிக்கு  அன்னத்தை அழைத்து வருகிறார் அமுதா. அங்கு அன்னம் கதிரேசன் புகைப்படத்தை திறந்து வைக்கிறாள்.  


தற்கொலைக்கு முயன்ற அன்னம் 


அப்போது அங்கு வரும் பழனி ஆட்கள் பிரச்சனை செய்து பொருட்களை அடித்து உடைக்கிறார்கள். இன்றைய எபிசோடில்  கதிரேசனின் போட்டோவை பழனி ஆட்கள் வைத்து உடைக்க அன்னம் மயங்கி சாய்கிறாள். இதனையடுத்து வடிவேலு கோயிலுக்கு போனோமா காரியத்தை செஞ்சோமன்னு இல்லாம ஸ்கூலுக்கு போயி அசிங்கப்பட்டீங்களா, உன் பையன் தான் பிராடு பண்ணி உன்னை அசிங்கப்படுத்துன்னான்னு பார்த்தா உன் மருமகளும் உன்னை கூட்டிட்டு போய் ஊரு முன்னால அசிங்கப்படுத்திருக்கா என சொல்லி திட்டுகிறார். 


இதனால் வேதனையில் இருக்கும் அன்னலட்சுமி அழுதுக்கொண்டே ரூம் உள்ளே சென்று தூக்கு மாட்டிக் கொள்ள முயல்கிறார். இதனை பார்த்து அதிர்ச்சியடையும் அமுதா அவளை காப்பாற்றி எல்லாம் சரியாகும் என சொல்கிறார். அடுத்ததாக  கோயிலில் அமுதா வேண்டுதல் செய்கிறாள். பின்னர் ஓரிடத்தில் அமர்ந்து நடந்ததையெல்லாம் யோசித்து கொண்டிருக்கும் போது, கோயிலில் இருக்கும் பெண் ஒருவர், இவ்வளவு கஷ்டப்பட்டு வேண்டும் உனக்கு உதவிக்கு யாருமே வரலையா என கேட்டு விட்டு தண்ணீர் கொண்டு வர செல்கிறார்.


அப்பெண் அங்கிருந்து செல்ல ஒரு சிறுவன் அமுதாவிற்கு மோர் கொண்டு வந்து கொடுக்கிறான். மேலும் அச்சிறுவன் எதற்காக இந்த வேண்டுதல் என கேட்க, அமுதா உனக்கு புரியாது என சொல்கிறார். உடனே எனக்கு எல்லாம் புரியும் நீ என்னன்னு சொல்லு, என கேட்க, அமுதா விஷயத்தை கூறுகிறார். அதற்கு உன் கஷ்டத்துலயே உன்னோட கவலைக்கான பதில் இருக்கு என சொல்லிவிட்டு விபூதியை பூசிவிட்டு அச்சிறுவன் செல்கிறார்.


இதனிடையே தண்ணீரை கொண்டு வர சென்று திரும்பி வந்த நிலையில் அவரிடம் தனக்கு சிறுவன் மோர் குடுத்ததாக அமுதா சொல்ல, அப்படியே யாருமே இங்க இல்லையே என அப்பெண் பதில் சொல்கிறார். இதனைத் தொடர்ந்து அமுதா செந்தில் வீட்டில் பைக்கை துடைத்துக் கொண்டிருக்கும் போது என் கூட வரச் சொல்லுங்க என மாணிக்கத்திடம்  சொல்கிறார்.ஆனால் அமுதா மாணிக்கத்தையும் உடன் வருமாறு கூறுகிறார்.






அமுதா எடுத்த முடிவு 


அமுதாவிடம் மாணிக்கம் எதுக்கும்மா வரச் சொன்னே என கேட்க,  செந்திலை வாத்தியாராக்க போறேன்.  அதுக்கு என்ன பண்ணனும் என அவர் கேட்க இருவரும் ஷாக்காகின்றனர். செந்திலிடம் அமுதா நீ சொன்ன பொய்யை உண்மையாக்கு.. அப்ப தான் உன் அம்மாவோட அன்பு கிடைக்கும் என சொல்கிறார். அதற்கு செந்தில் உன் அன்பும் கிடைக்குமா  என கேட்க அமுதா எதுவும் சொல்லாமல் அங்கிருந்து நகர்வதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.