பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா வீட்டுக்கு சென்று பாக்கியா நியாயம் கேட்கும் காட்சிகள் இன்று இடம்பெறவுள்ளது.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது, அவரை நடுவீட்டுல் நிற்க வைத்து கேள்வி கேட்டது, பாக்யா வீட்டை விட்டு வெளியேறியது என இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்து நகர்கிறது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
கோபியின் அம்மா ஈஸ்வரி வந்து கூப்பிட்டும் பாக்யா வர மறுத்ததை வேலைக்காரி செல்வி பாராட்டுகிறார். இப்படியே உன் முடிவில் உறுதியாய் இருந்தால் நியாயம் கிடைக்கும் என கூறுகிறார். அப்போது பாக்யாவுக்கு ஈஸ்வரி ராதிகாவுடன் நட்பு குறித்து விமர்சித்தது நியாபகம் வருகிறது. உடனடியாக செல்வியுடன் ராதிகா வீட்டுக்கு பாக்யா செல்கிறார். அவரை சந்தித்து ஏன் இப்படி பண்ணீங்க என கேட்க, எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசுமாறு ராதிகா கூறுகிறார். அதற்கு கடைசியில் நீங்களும் என்னை ஏமாத்திட்டீங்கல்ல...நீங்க கல்யாணம் பண்ணிக்க போறதா சொன்னீங்களே அது யாரு? என பாக்யா கேட்கிறார்.
இதனை சற்றும் எதிர்பாராத ராதிகா, நிறைய பிரச்சனை ஆயிடுச்சி..நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க போறது இல்ல...மும்பைக்கு போறேன் என பதட்டத்துடன் தெரிவிக்கிறார். இது நான் கேட்டதுக்கு பதில் இல்லையே என பாக்யா கூற, ராதிகாவோ நீங்க என்ன தெரிஞ்சிக்கிட்டு இங்க வந்தீங்கன்னு எனக்கு தெரியல. ஆனால் நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க போறது இல்லை. எனக்கு எதுவுமே வேண்டாம் என தெரிவிக்கிறார்.
நேத்து நீங்க போறதா சொன்னீங்களே என பாக்யா அடுத்தடுத்து கேள்வியெழுப்ப ராதிகா மயூவுக்கு உடம்பு சரியில்ல அதான் போகலன்னு சொல்கிறார். மயூவுக்கு உடம்பு சரியில்லைன்னு போகலையா..இல்ல.. உங்களை கல்யாணம் பண்ணிக்க போறவருக்கு உடம்பு சரியில்லை இல்லைன்னு போகலையான்னு பாக்யா கேட்க ராதிகா அதிர்ச்சியில் உறைகிறார். உடனே பாக்யா தான் ஏமாந்து போன கதையை சொல்கிறார். செல்வியும் பாக்யா அக்கா எல்லா விஷயமும் தெரிஞ்சிதான் இங்க வந்துருக்காங்கன்னு சொல்ல ராதிகா பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.
மேலும் மருத்துவனையில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் ராதிகாவுக்கு பாக்யா நினைவுப்படுத்துகிறார். நான் எல்லாரையும் விட உங்களை ரொம்ப நம்புனேன் என பாக்யா கூறுகிறார். ஆனால் தனக்கு எதுவுமே தெரிஞ்சி நடக்கவில்லை என ராதிகா சொல்கிறார். முன்னாடி தான் தெரியாது..தெரிஞ்சிக்கிட்ட அப்புறம் என்கிட்ட வந்து சொல்லிருக்கலாமே என சொல்ல ராதிகா தனது பக்க நியாயத்தை சொல்ல முடியாமல் தவிப்பது போல இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.
அடுத்த வாரம் ஒளிபரப்பாகும் எபிசோடில் ராதிகா என்ன நடந்தது என்பதை பாக்கியாவிடம் சொல்லும் காட்சிகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்