பாக்கியலட்சுமி சீரியலில் திருமணம் முடிந்து வீட்டுக்கு வரும் எழில் - அமிர்தாவை ஈஸ்வரி வீட்டை விட்டு வெளியே அனுப்பும் காட்சிகள் இடம் பெறுகிறது. 


திருப்பங்கள் நிறைந்த பாக்கியலட்சுமி


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில், பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர்.


இன்றைய எபிசோட் அப்டேட்  


திருமணம் முடிந்து கோபி, ராதிகா, மயூ, இனியா அவர்கள் வீட்டுக்கு செல்கிறார்கள். அப்போது மயூ எழில் அண்ணனுக்கு கல்யாணம் நடந்துச்சா என கேட்கிறார். ராதிகா ஆமா என சொல்ல, ஏன் 2 தடவை நடந்துச்சு என வெகுளியாக கேள்வியெழுப்புகிறார். இனியா எழிலுக்கு அமிர்தாவை தான் பிடித்து இருந்ததாகவும், வர்ஷினியை பிடிக்கவில்லை எனவும் விளக்கம் கொடுக்கிறார். உடனே மயூ ராதிகாவிடம் உங்க கல்யாணம் கூட பிரச்சினையா இருந்துச்சு.. கல்யாணம் என்றாலே பிரச்சினை தான் போல என சொல்லிவிட்டு செல்கிறார். 






இதனையடுத்து கோபி ராதிகா இடையே மண்டபத்தில் நடந்த சம்பவங்கள் குறித்த பேச்சு செல்கிறது. இதில் ராதிகா பாக்யாவுக்கு சப்போர்ட் பண்ணி பேச கோபி டென்ஷனாகிறார். உங்க பேச்செல்லாம் என்கிட்ட மட்டும் தான். மண்டபத்துல வாயே திறக்கலையே என சொல்லிவிட்டு ராதிகா செல்ல கோபி புலம்புகிறார். 


வீட்டுக்கு வந்த எழில் 


திருமணம் முடிந்து எழில் - அமிர்தா இருவரும் வீட்டுக்கு வருகின்றனர். உடன் பாக்யா, ராமமூர்த்தி, ஜெனி, செல்வி என அனைவரும் வருகின்றனர். ஏற்கனவே கோபத்தில் உச்சத்தில் இருக்கும் ஈஸ்வரி வாசலில் நிற்க வைத்து பாக்யாவிடம் தன்னை அவமானப்படுத்த வேண்டும் என்றே இப்படியெல்லாம் செய்கிறாயா என கேட்டு சண்டைக்கு செல்கிறார். என் பிள்ளை அவனுக்கு பிடிச்ச வாழ்க்கையை தான் வாழ வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கும் பாக்யா மீண்டும் அந்த கருத்தை முன்வைக்கிறார். 


ஈஸ்வரியிடம் ஜெனி சமாதானம் பேச முயல, செழியனுக்கும் ஜெனிக்கும் இடையே சண்டை வருகிறது. எல்லோரும் வந்தா வீட்டுக்குள்ள நானும் வாரேன். இல்லன்னா வரலைன்னு ஜெனி கறாராக சொல்ல செழியன் டென்ஷனாகிறார். அதேசமயம் ராமமூர்த்தி ஈஸ்வரியிடம் உனக்கு பிடிக்கலைன்னா வா நாம ஊருக்கு போயிரலாம். இவங்க இப்படித்தான் வாழணும்ன்னு நாம் எப்படி சொல்ல முடியும் என கூறுகிறார். இதனால் ஈஸ்வரி ஆத்திரத்தின் எல்லைக்கே செல்கிறார். 


அடுத்ததாக அமிர்தா மேல உள்ள கோபத்தில் எழிலுக்கு எதுவும் பிரச்சினை இருக்கா என கன்னாபின்னவென ஈஸ்வரி பேச பாக்யா டென்ஷனாகிறார். தொடர்ந்து இந்த வீட்டுக்குள்ள யாருக்கும் இடமில்ல என சொல்லி பாக்யா, எழில், அமிர்தா, அவரது குழந்தையை போகச் சொல்லும் காட்சிகளோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.