பாக்கியலட்சுமி சீரியலில் எழில் - அமிர்தா இடையே திருமணம் நடக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 


திருப்பங்கள் நிறைந்த பாக்கியலட்சுமி


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில், பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர்.


இன்றைய எபிசோட் அப்டேட்  


எழில் அமிர்தாவை ஊரில் கொண்டு போய் விடச் சொல்லி தனது நண்பர் சதீஷிடம் சொன்ன நேரத்தில், பாக்யாவின் பிளானால் மணப்பெண்ணாக அமிர்தா மாறுகிறார். இந்த கதையை அனைவரது முன்னிலையிலும் பாக்யா போட்டுடைக்கிறார். அவர்கள் இருவருக்கும் தான் கல்யாணம் நடக்க வேண்டும் என உறுதியாக தெரிவிக்க, ஈஸ்வரி, ராமமூர்த்தி என யாரும் பதில் பேச முடியாமல் நிற்கின்றனர். இதனைத் தொடர்ந்து எழில் - அமிர்தா இடையே திருமணம் விமரிசையாக நடக்கிறது. ஆனால் மணமேடையில் கோபத்தில் ஈஸ்வரி சென்று விடுகிறார். 


இதனைத் தொடர்ந்து பாக்யாவை தனியாக அழைத்து எழில் காலில் விழுந்து நன்றி தெரிவிக்கிறார். நீ மட்டும் இன்னைக்கு இப்படி ஒரு முடிவு எடுக்கலைன்னா நான் காலம் முழுக்க அழுதுட்டே தான் இருந்துருப்பேன் என எழில் தெரிவிக்கிறார். இதனைத் தொடர்ந்து அமிர்தாவின் அத்தை -மாமா இருவரும் ஊருக்குச் சென்று அமிர்தா அம்மாவிடம் விஷயத்தை தெரிவிக்க வேண்டும் என கூறுகின்றனர். மேலும் அமிர்தாவின் குழந்தையையும் தாங்கள் அழைத்துச் செல்வதாக சொல்ல, எழில் - அமிர்தா இருவரும் மறுக்கின்றனர். 


இதற்கிடையில் திருமணம் முடிந்து வீட்டுக்கு செல்லும் எழில்,அமிர்தா,பாக்யா என அனைவரையும் வாசலில் நிறுத்தி கேள்வியெழுப்பும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.