அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் செந்தில் காலேஜ் படிப்புக்கு தொடர்ச்சியாக சிக்கல் ஏற்படும் காட்சிகள் இடம் பெறுகிறது. 


இதுவரை நடந்தது என்ன?


பணத்தேவைக்காக அன்னலட்சுமி, அமுதா இருவரும் வயலில் அறுப்பு வேலைக்கு வந்திருப்பதை பார்த்து உமா அவமானப்படுத்துகிறாள். அன்னலட்சுமி அதை பார்த்து விட்டு குமரேசன் குடும்பத்தாரிடம் என் பையன் கண்டிப்பா படிச்சி வாத்தியார் ஆவான் என சவால் விடுகிறாள்.பிறகு அமுதா அவர்களிடம் இவங்க கணக்கை தீர்க்குறதுக்கான நேரம் வந்துவிட்டதாக சொல்ல, அன்னலட்சுமி அமுதாவிடம் நடந்தவை செந்திலுக்கு தெரிய வேண்டாம் என சொல்கிறாள். 


மறுபக்கம் குமரேசன், பழனி, உமா மூவரும் செந்திலை படிக்க விடாமல் காலி செய்ய வேண்டும் என திட்டமிடுகின்றனர். பிறகுசெந்திலுக்கு குமரேசன் குடும்பத்தினர் அவமானப்படுத்தியது தெரிய வர அமுதா, அன்னம் இருவரிடமும் சண்டை போடுகிறான். 


இன்றைய எபிசோடில் நடப்பது என்ன? 


இன்றைய எபிசோடில் அமுதாவும் அன்னமும் செந்திலுக்கு பீஸ் கட்ட காலேஜூக்கு வருகின்றனர். ஆனால் ஏற்கனவே செந்திலுக்கு பீஸ் கட்டப்பட்டதாக கேஷியர் சொல்கிறார். அமுதா ஒன்றும் புரியாமல் யார் பணம் கட்டியது என கேட்க, இப்பதாம்மா கட்டிட்டு போறாரு என கை காட்ட, அமுதா யாரென்று பார்க்க, அங்கு இளங்கோ சென்று கொண்டிருக்கிறான்.


உடனே அமுதா இளங்கோவிடம் நீ எதுக்குன்னே பீஸ் கட்டுன என கேட்கிறார். எனக்கு என் தங்கச்சி திரும்ப வீட்டுக்குள்ள வரனும் என சொல்ல, அமுதா நெகிழ்கிறாள்.  இதற்கிடையில் செந்தில் காலேஜில் படித்துக் கொண்டிருக்கும் போது பேராசிரியர் ஒருவர் வந்து உன்னை யாருடா காலேஜ்ல சேர்த்தது? உனக்கு எந்த தகுதியும் இல்லை வெளியே போ என சொல்கிறார். அப்போது அங்கு வரும் HOD என் ஸ்டூடண்டை வெளியே போகச் சொல்றதுக்கு நீ யாருய்யா என பேராசிரியரிடம் சண்டையிடுகிறார்.


இதனால் டென்ஷாகும் பேராசிரியர் HODயிடம் 5 வருஷத்துக்கு முன்னாலயே இவனை காலேஜ்ல இருந்து வெளில அனுப்பியாச்சு.  இவனே ஏதோ கோல்மால் பண்ணி நீங்க காலேஜூக்குள்ள சேர்த்திருக்கீங்க என சொல்கிறார். உடனே HOD அவரிடம் நான் போலீஸ் வேலையை விட்டு வாத்தியாரா வந்திருக்கேன், எனக்கு தெரியும் சட்டம் என்னன்னு என சொல்கிறார். 


பிறகு கல்லூரி முதல்வரிடம், அந்த பேராசிரியர் செந்தில் தேர்வில் பாஸ் ஆகவே இல்லை, HOD ஏதோ பண்ணி அவனை மீண்டும் காலேஜ்ல சேர்த்திருக்காரு என புகார் செய்கிறார். ஆனால் HOD கல்லூரி முதல்வரிடம் செந்திலை தான் தனியாக இண்டர்வியூ செய்ததாகவும், அதில் அவன் பாஸ் ஆகி விட்டதாகவும் சொல்கிறார். இந்த பிரச்சினையை கண்டு  அமுதா, அன்னம், செந்தில் என எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.