பாக்கியலட்சுமி சீரியலில் எழில் - வர்ஷினி திருமணத்தை பாக்யா நிறுத்தும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 


எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில், பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர்.


இன்றைய எபிசோட் அப்டேட் 


எழில் பணத்துக்காகத்தான் இந்த கல்யாணத்திற்கு சம்மதித்துள்ளான் என்ற உண்மை தெரிந்த பாக்யா அதிர்ச்சியடைகிறாள். மணமேடையில் வர்ஷினி அமரப்போகும் போது அவரை தடுக்கும் பாக்யா இந்த கல்யாணம் நடக்காது என கூறுகிறார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியடையும் போது அமிர்தாவை கூப்பிட்டு மணமேடைக்கு வருகிறார். எழில் அமிர்தாவை தான் விரும்புவதாகவும், இந்த கல்யாணம் நடந்தாலும் அது பின்னாடி ரொம்ப கஷ்டமா போயிடும் என பாக்யா வர்ஷினி அப்பாவிடம் சொல்கிறார். 






ஈஸ்வரி குறுக்கிட்டு எழில் சம்மத்தோட தான் கல்யாணம் நடக்குது என சொல்கிறார். ஆனால் பாக்யா எழிலிடம் கேட்க, தனக்கு அமிர்தாவை தான் பிடித்திருப்பதாக கூறுகிறார். 


இதனால் டென்ஷனாகும் அவர், இதுக்குமேல இங்க இருந்து வேஸ்ட். என் பொண்ணுக்கு எப்படி கல்யாணம் பண்ணனும்ன்னு எனக்கு தெரியும். ஒரு படம் பண்ணுன எழில், இனிமேல் எப்படி படம் பண்றான்னு பார்க்குறேன் என கொந்தளிக்கிறார். ஆனால் பாக்யாவோ நான் கல்யாணத்துக்கு ஆகுற செலவை கொடுத்துடுறேன் என தெரிவிக்கிறார். இதனால் மேலும் கோபப்பட்டு தயாரிப்பாளர் மகள் வர்ஷினியுடன் மண்டபத்திலிருந்து வெளியேறுகிறார். 


இதற்கிடையில் கோபி, எழிலோட முழு சம்மதத்தோட தானே இந்த கல்யாணம் நடக்குது. இப்ப வந்து பிரச்சினை பண்ற என பாக்யாவிடம் சண்டைக்கு செல்கிறார். ராமமூர்த்தி, ஈஸ்வரி, செழியன் என அனைவரும் பாக்யாவை கடுமையாக விமர்சிக்கின்றனர். ஆனால்  எனக்கு நேத்து நைட்டு தான் எல்லா விஷயமும் தெரிய வந்துச்சு. ஆரம்பத்துல இருந்து எனக்கு சந்தேகம் இருந்துச்சு. ஏன் இந்த கல்யாணம் அவசர அவசரமா நடக்குதுன்னு என பாக்யாவும் பதிலுக்கு பதில் பேசுகிறார். 


நடப்பதையெல்லாம் பார்த்து கோபத்தின் உச்சிக்கே செல்லும் கோபி, பாக்யாவிடம் சண்டைக்கு செல்கிறார். உன் பையன் கல்யாணத்தை நிறுத்திட்ட இனி என்ன பண்ணப்போற என கேள்வியெழுப்பும் காட்சிகளோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.