அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் பணத்தேவைக்காக அமுதாவும் அன்னலட்சுமியும் குடும்பத்தினருக்கு தெரியாமல் வேலைக்கு செல்லும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 


அமுதாவும் அன்னலட்சுமியும்


தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள  ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர்.


முன்னதாக செந்தில் அமுதாவிடம் தான் படித்து வாத்தியார் ஆகிவிடுவேன் என வாக்கு கொடுக்கிறான். பின்னர் உமா, பழனி இருவரும் வடிவேலுவிடம் அமுதாவிற்கு போட்டியாக குறைவான விலையில் பொருட்கள் விற்கும் கடையை தொடங்க சொல்லி ஏத்தி விடும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெற்றது. 






இன்றைய எபிசோடில் செந்தில்  பனியில் நனைந்தபடி இரவு படித்துக் கொண்டிருப்பதை பார்த்து அமுதா நெகிழ்ச்சியடைகிறாள். அவரைப் பார்க்கும் செந்தில் உன்னை தோற்க விட மாட்டேன் என சொல்கிறான்.  இதனையடுத்து புவனா காலேஜூக்காக அமுதாவிடம் பணம் கேட்க, வீட்டில் இருக்கும் பணத்தை அமுதா  எடுத்து கொடுக்கிறாள். இதனைத் தொடர்ந்து செந்தில் தான் எக்ஸாம் பீஸ் கட்ட வேண்டும், பெயிண்டிங் வேலை வந்திருப்பதாக சொல்கிறான். அதனால் காலேஜூக்கு 2 நாள் லீவு போடுவதாக தெரிவிக்க அமுதா டென்ஷனாகிறாள். செந்திலிடம், நீங்க படிக்கிறதை மட்டும் பாருங்க, நான் பீஸ் கட்டிக்கிறேன் என சொல்லியபடி வீட்டில் ஒஓவ்வொரு இடமாக பணம் இருக்கிறதா என தேடுகிறாள். 


அன்னலட்சுமி அதை பார்த்து வருத்தப்படுகிறார். இதற்கிடையில் பண தேவைக்காக வயலில் அறுப்பு வேலைக்கு அமுதா செல்கிறாள். அன்னமும் அங்கே வேலைக்கு வருகிறாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வார்களா என்கிற டென்ஷன் ஒரு பக்கம் இருக்க,  குமரேசன், பழனி, உமா அங்கே வேலை செய்துக் கொண்டிருக்கும் இருவரையும் பார்த்து விடும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.