Baakiyalakshmi serial August 5: செத்துப்போக துணிந்த இனியாவை காப்பாற்றிய பாக்யா... காலையிலேயே ஈஸ்வரிக்கு காத்திருந்த ஷாக்...

Baakiyalakshmi serial Today :லெட்டர் எழுதி வைத்து விட்டு செத்துப்போக துணிந்த இனியாவை காப்பாற்றிய பாக்கியா, ஈஸ்வரியிடம் சொல்லி ஆறுதல் தேடுகிறாள். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்டில் என்ன நடக்கிறது. 

Continues below advertisement

Baakiyalakshmi serial August 5 :  விஜய் டிவியின் மிகவும் பிரபலமான தொடரான 'பாக்கியலட்சுமி' சீரியலின் இன்றைய (ஆகஸ்ட் 5) எபிசோடில் "அம்மாவுக்கு எப்போதுமே நான் பிரச்சனை மேல பிரச்னையா கொடுத்துட்டே இருக்கேன். உன்ன போல ஒரு நல்ல அம்மா யாருக்குமே கிடைக்க மாட்டாங்க. உனக்கு என்னால எந்த சந்தோஷமும் இல்ல. நான் உங்க எல்லாரையும் ஒரேடியா விட்டுட்டு போறேன் மா" என லெட்டர் எழுதி வைக்கிறாள் இனியா. ஆனால் அவள் அந்த லெட்டரை வைக்கும் போது கைதவறி பாட்டில் கீழே விழ பாக்கியா தூக்கத்தில் இருந்து எழுந்து விடுகிறாள். இனியாவை பார்த்து ஷாக்கான பாக்கியா இனியாவிடம் என்ன விஷயம் என கேட்க அவள் எதையெதையோ சொல்லி சமாளிக்கிறாள். அவள் கையிலிருக்கும் லெட்டரை பாக்கியா பார்த்து அதை புடுங்கி படித்து அதிர்ச்சியில் உறைந்து போகிறாள். "எங்க இனியா போவ?" என பாக்கியா கேட்க "செத்து போறேன்" என இனியா சொல்ல பாக்கியா தலையில் இடி விழுந்தது போல இருக்கிறது.
பாக்கியா இனியாவிடம் சத்தம் போட்டு கத்தி அழ அதை கேட்ட ஜெனி என்ன நடக்கிறது என பார்ப்பதற்காக பாக்கியா ரூமுக்கு வருகிறாள். ஜெனியும் அந்த லெட்டரை வாங்கி படித்து பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். ஜெனியும் இனியாவை பயங்கரமாக திட்ட பின்னர் அவளை சமாதானம் செய்கிறாள். 

Continues below advertisement

 

 


பாக்கியா : "நீ செத்து போயிட்டா அதுக்கு அப்புறம் நான் மட்டும் உயிரோட இருப்பேன் என நினைச்சியா. நானும் உடனே செத்துப்போயிடுவேன். உனக்காக தானே நான் இந்த வாழ்க்கையையே வாழுறேன். உன்னை நல்ல வேலையில உட்கார வைக்கணும், நல்ல இடத்துல கட்டி கொடுக்கணும்னு தானே நான் ஓடிக்கிட்டு இருக்கேன்" என அழுகிறாள். 

"இனியா : நான் இனிமேல் இப்படி பண்ண மாட்டேன். என்னை மன்னிச்சுடு மா" 

 

ஜெனி : ஆண்டிகிட்ட இனிமேல் இத போல செய்யமாட்டேன் என சத்தியம் செய்" என சொல்கிறாள் ஜெனி. 

 

பாக்கியா இனியாவை சமாதானம் செய்து தூங்க வைக்கிறாள். 

 

"ஜெனி : இனி இனியா தப்ப எதுவும் செய்யமாட்டா அதனால் கவலைப்படாதீங்க. எதையும் பற்றி யோசிக்காமல் தூங்குங்க" என சொல்லி ஜெனி சொல்லிவிட்டு செல்கிறாள். 

 

விடிய விடிய பாக்கியா தூங்காமலேயே குழம்பி போய் கவலையுடன் உட்கார்ந்து கொண்டு இருக்கிறாள். 

 

அடுத்த நாள் காலை பாக்கியா கிச்சனில் இனியாவை பற்றியே யோசிச்சிகிட்டே பாலை போங்க வைக்கிறாள். அதை பார்த்துவிட்ட ஈஸ்வரி, பாக்கியாவிடம் என்ன நடந்தது என விசாரிக்க பாக்கியா அழுது கொண்டே நடந்தை பற்றி சொல்கிறாள். முதலில் அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரி பாக்கியாவை சமாதானம் செய்கிறார்.  

 

"ஈஸ்வரி : இனிமேல் இனியாவையும் வீட்டையும் நாங்கள் பார்த்து கொள்கிறோம். நீ உன்னுடைய பிசினஸை கவனி. இனி இனியா எந்த தப்பும் பண்ண மாட்டா. நீயும் எந்த தப்பும் பண்ணலை. உன்னோட சக்திக்கும் மீறி எல்லாரையும் நல்ல படியா பாத்துக்குற. இப்படி ஒரு உதவாத பையனை பெத்து உனக்கு கல்யாணம் பண்ணி வச்சு உன்னோட வாழ்க்கையை நான் தான் கெடுத்துட்டேன். அதுக்கு நான் தான் உங்கிட்ட மன்னிப்பு கேக்கணும்" என ஈஸ்வரி சொல்லி பாக்கியாவை ஆறுதல் படுகிறார். இது தான் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் கதைக்களம். 

Continues below advertisement
Sponsored Links by Taboola