Siragadikka Aasai Serial August 5 : விஜய் டிவியில் திங்கள் முதல் சனி

ரவி ஸ்ருதியிடம் சென்று சமாதானமாக பேசுகிறான். ஸ்ருதியின் அம்மா ரவியிடம் வந்து பேசியதற்காக ஸ்ருதி மீது கோபப்பட்டு பேசியிருக்க கூடாது என வருத்தப்படுகிறான். இருவரும் வெளியில் சென்று டின்னர் சாப்பிட்டு வரலாம் என பிளான் செய்கிறார்கள்.
முத்துவும் மீனாவும் கிரிஷ் பற்றிய உண்மையை சொல்லி தத்து எடுப்பது குறித்து வீட்டில் உள்ளவர்களிடம் பேசுவதற்காக அனைவரையும் அழைக்கிறார்கள். கிரிஷ் பிறந்தநாள் நாளுக்கு சென்றது பற்றியும் அவனுடைய அம்மா பற்றிய உண்மையையும் சொல்கிறார்கள். அது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. இது அனைத்தையும் ரோகிணி மாடிப் படியில் நின்று கேட்டு கொண்டு இருக்கிறாள்.
"விஜயா : நான் அன்னிக்கே சொன்னேன் இல்லையா அந்த பொம்பளைய பார்த்தா சரியா இல்லன்னு...
மீனா : அவங்க சூழ்நிலை அப்படி. அதனால தான் அவங்க உண்மையை சொல்லல" என்கிறாள்.
ஸ்ருதி, ரவி, அண்ணாமலை என அனைவருமே அந்த பொண்ணு செய்தது மிக பெரிய தப்பு. பெற்ற பிள்ளையிடம் அத்தை என சொல்லி வளர்ப்பது சரியில்லை என்கிறார்கள்.
"முத்து : அம்மா இருந்தும் இல்லாம இருப்பது எவ்வளவு கஷ்டம் என எனக்கு தானே தெரியும். நான் அப்படி தானே அம்மா பாசமே இல்லாமல் பாட்டி வீட்ல வளர்ந்தேன்"என சொல்லி சங்கடப்படுகிறான்.
"மனோஜ் : இவ்வளவு பண்ண அந்த பொண்ணு நாளைக்கு கல்யாணம் நடந்து குழந்தை இருக்குற விஷயத்தை மறைச்சு யாரையாவது கல்யாணம் கூட பண்ணிக்குவா. பாவம் யார் ஏமாற போறது என தெரியல" என நக்கலாக சொல்கிறான். ஏமாந்தது அவன் தான் என தெரியாமலேயே பேசுகிறான். இதை படியில் நின்று கேட்ட ரோகிணி ஷாக்காகி நிற்கிறாள். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.