பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவிடம் அவரது மூத்த மகன் செழியன் மன்னிப்பு கேட்கும் காட்சிகள் இன்று இடம் பெறுகிறது. 


ரசிகர்களை கவரும் பாக்கியலட்சுமி 


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றது. கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறியது, ராதிகா கோபியை திருமணம் செய்ய சம்மதித்தது, இருவரும் திருமணத்துக்கு தயாரானது,  கோபி குடும்பத்தினர் முயற்சித்தும் திருமணம் நடந்தது போன்ற காட்சிகள் இடம் பெற்றது.  இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.


உண்மை தெரிந்து அதிர்ச்சியடையும் செழியன் 


மண்டபத்தில் ராதிகாவின் கையை பிடித்துக் கொண்டு கோபி மேலே நிற்கும் பாக்யாவை பார்க்கிறார். ஆனால் அவரோ இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வீட்டுக்கு வரும் இனியா செழியனிடம் நடந்தவற்றை கூறுகிறாள். இதனைக் கேட்டு அவர் அதிர்ச்சியடையும். இது ஆன்ட்டிக்கு தெரியுமா  என ஜெனி கேட்க, பாக்யா அங்க தான் சமைச்சிட்டு இருந்தா என ஈஸ்வரி சொல்ல செழியன் உடைந்து போகிறார். அப்பா இப்படி பண்ணுவார்ன்னு நான் நினைக்கல என கதறி அழுகிறார். 


தனியே விடப்பட்ட கோபி 


வீட்டுக்கு வந்ததும் ராதிகா மற்றும் கோபிக்கு வெளியில் வைத்து ஆரத்தி எடுக்கப்படுகிறது. அப்போது அக்கம் பக்கத்தினர் கோபியை பற்றி பேச அவர் அதிர்ச்சியடைந்து ராதிகா அம்மாவிடம் கேட்கிறார். அவரோ, எல்லாருக்கும் தெரியட்டும் என சொல்கிறார். வீட்டுக்குள் போனதும்  அனைவரும் செல்ஃபி எடுக்க பின் ராதிகா ரூமுக்குள் செல்கிறார். கோபியை சுற்றி இருந்தவர்களும் சென்று விட தனியாளாய் நடுவீட்டில் உட்கார்ந்திருக்கிறார். 


பாக்யாவிடம் மன்னிப்பு கேட்ட செழியன் 


வீட்டுக்கு வரும் பாக்யாவிடம் அப்பாவுக்கு சப்போர்ட் பண்ணிட்டு ரொம்ப பேசிட்டேன் என்ன மன்னிச்சுருங்க என சொல்லி செழியன் மன்னிப்பு கேட்கிறார். நீங்க பண்ணுவது தான் சரி. இனிமேல் கவலைப்படாதீங்க. இந்த குடும்பத்தை நான் பார்த்துக்கிறேன் என சொல்கிறார். இனியாவும் நானும் தப்பு பண்ணிட்டேன் என அழுகிறார். பின்னர் சமையலறையில் பாக்யா அழுதுக் கொண்டிருக்க ஈஸ்வரி ஆறுதல் சொல்கிறார். 


அடுத்த காட்சியில் எழில் வீட்டுக்கு வந்து தனக்கு வேலை இருந்ததால் மண்டபத்திற்கு வர முடியவில்லை என கூறுகிறார். பின் இனியாவை சந்திக்கும் எழில் உண்மையை தெரிந்துக் கொண்டு நொந்து போகிறார். உடனே பாட்டி, தாத்தா, அம்மா எப்படி பீல் பண்ணுவாங்க என யோசித்துக் கொண்டே கீழே இறங்கி வந்து பாக்யாவை கட்டி பிடித்து அழுகிறான். இதனைத் தொடந்து இனியாவிடம் நீ எதுக்கும் கவலைப்படாத  2 அண்ணன்கள் இருக்கோம் என சொல்லி ஆறுதல் கூறுகிறார். பின் ஈஸ்வரிடமும் நாங்க இருக்கோம் என ஆறுதல் சொல்வதோடு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.