பாக்கியலட்சுமி சீரியலில் கோபி - ராதிகா திருமண நிகழ்ச்சி நடக்கப்போகும் நிலையில் பாக்யாவுக்கு உண்மை தெரிய வரும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது.
ரசிகர்களை கவரும் பாக்கியலட்சுமி
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறியது, . ராதிகா கோபியை திருமணம் செய்ய சம்மதித்தது, இருவரும் திருமணத்துக்கு தயாராகும் காட்சிகள் இடம் பெற்றது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
மயூவால் பாக்யாவுக்கு தெரிந்த உண்மை
கல்யாண மண்டபத்தில் மயூவுக்கு தொண்டை வலி காரணமாக பாட்டியிடம் வெந்நீர் கேட்க, அவர் மேலே சென்று கிச்சனில் வாங்கிக்க என தெரிவிக்கிறார். அங்கு செல்லும் அவள் பாக்யாவை கண்டு ஆச்சரியமடைய, பதிலுக்கு பாக்யா அதிர்ச்சியடைகிறார். தனக்கு வெந்நீர் வேண்டும் என கேட்டு விட்டு நீங்க இங்க என்ன பண்றீங்க மயூ கேட்கிறார். தான் சமையல் ஆர்டருக்காக வந்திருப்பதாக பாக்யா கூறிவிட்டு மயூவிடம் நீ எங்க இங்க என கேள்வியெழுப்புகிறார். அதற்கு அம்மாவுக்கு கல்யாணம் என மயூ பாக்யாவுக்கு இடி விழுந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
ஆனால் அதற்குள் பந்தி பரிமாறி கொண்டிருக்கும் செல்வி மணமேடையில் மாலையும் கழுத்துமாக நிற்கும் கோபி, ராதிகாவை பார்த்து அதிர்ச்சியடைகிறார். உடனடியாக பாக்யாவை இழுத்துக் கொண்டு மேடை அருகே செல்கிறார். பாக்யாவை கண்டு அதிர்ச்சியடையும் ராதிகாவின் அம்மா அவரிடம் பிரச்சனை செய்யவே வர்றீங்களா என வாக்குவாதம் செய்கிறார். அப்போது ராதிகாவுடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்க செல்லும் கோபி செல்வியையும், பாக்யாவையும் கண்டு நடுங்குகிறார். பாக்யாவை பார்த்ததும் ராதிகாவுக்கும் ஒன்றுமே ஓடவில்லை.
அமைதியாக நிற்கும் பாக்யா
உடனடியாக செல்வி கோபியை கோபத்தின் உச்சத்தில் திட்டி தீர்க்கிறார். வீட்டுல வயசான அப்பா, அம்மா, வயசுக்கு வந்த பொண்ணை வச்சிகிட்டு இதெல்லாம் நல்லாவா இருக்கு என கேள்வி கேட்க, அப்போது ராதிகாவின் அண்ணன் சந்துரு யாரு இவங்க என அம்மாவிடம் கேட்கிறார். அதற்கு செல்வி, மாலையும் கழுத்துமா வெக்கங்கெட்டு நிற்கிற இவரோட பொண்டாட்டி தான் இவங்க என சொல்கிறார். உடனே பொங்கியெழும் கோபி, யாரு என் பொண்டாட்டி...டைவர்ஸ் கொடுத்து வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டிங்க...அப்பவே அதெல்லாம் முடிஞ்சி போச்சி..இப்ப ராதிகா தான் என் பொண்டாட்டி.. என எல்லோர் முன்னிலையில் தெரிவிக்கிறார்.
அங்கு வரும் மண்டப மேனேஜர் சத்தம் போட்டு பாக்யாவையும், செல்வியையும் உள்ளே அனுப்புகிறார். ராதிகாவின் குடும்பத்தினர் சமையல் ஆர்டரை கேன்சல் செய்ய சொல்ல, அது சாத்தியமில்லை என சொல்லிவிட்டு ஓனரிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என அவர் சொல்கிறார். உள்ளே சென்று கோபியுடன் பாக்யா குடும்பத்தினர் கலந்து பேசி சமையல் ஆர்டரை கேன்சல் செய்ய முடிவு செய்கின்றனர்.
பாக்யா எடுத்த முடிவு
மேலே சமையலறை செல்லும் பாக்யா அமைதியாக நிற்பதை பார்த்து செல்வி டென்ஷனாகிறார். ஆனால் பாக்யாவுக்கோ மண்டப ஓனர் ஆர்டர் கொடுக்கும் போது பேசிய வார்த்தைகள் நியாபகம் வர, அவர் என்ன ஆனாலும் இந்த ஆர்டரை சரியாக செய்து விட வேண்டும் என வேலையை பார்க்க தொடங்குகிறார். இந்நிலையில் தான் ராமமூர்த்தி நிகழ்ச்சி நடக்கும் மண்டபத்தை தேடி பார்த்து கடைசியில் வந்து சேர்வது போல இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.