பாக்கியலட்சுமி சீரியலில் மகள் இனியாவுக்காக பாக்கியாவை சந்திக்கும் கோபி அவருடன் சமாதானம் பேசும் காட்சிகள் இன்று இடம் பெறுகிறது. 


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது, அவரை நடுவீட்டுல் நிற்க வைத்து கேள்வி கேட்டது, பாக்யா வீட்டை விட்டு வெளியேறியது என இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்து நகர்கிறது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம். 


இனியா வருத்தப்படுவதை கண்டு குடும்பத்தினர் என்ன செய்வது என தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க அந்நேரம்  வெளியே சென்ற கோபி வீட்டுக்கு வருகிறார். அவரிடம் இனியா பற்றி ஈஸ்வரி தெரிவிக்க பாக்யா மீது கோபி கோபப்படுகிறார். ஆனால் ஈஸ்வரி நீ இனியாவுக்கு பாக்யாவாகி விட முடியாது என கூறி அவரை அழைத்து வர கோபியிடம் சொல்கிறார். 
இதனைத் தொடர்ந்து தனது நண்பனை சந்திக்கும் கோபி வீட்டில் நடந்த பிரச்சனைகளை எல்லாம் சொல்லி புலம்புகிறார். மேலும் பாக்யாவை சமாதானப்படுத்தி வீட்டுக்கு கூப்பிட்டு வந்து சில நாட்களில் அவரை விவாகரத்து செய்யப்போவதாகவும், பின் ராதிகாவை திருமணம் செய்யப்போகிறேன் என்றும் தனது திட்டத்தை தெரிவிக்கிறார். ஆக மொத்தம் இவரு திருந்த மாட்டாரு போல...!


Also Read | The Legend Review Tamil: அகில உலக எக்ஸ்பெக்‌டேஷன்.. கலவரம் செய்த அண்ணாச்சி.. எப்படி இருக்கிறது ‘தி லெஜண்ட்’? விமர்சனம்..!


பின் பாக்யாவை காண அவரது ஆபிஸீற்கு கோபி போகிறார். அவரைப் பார்த்து எழிலும், வேலைக்காரி செல்வியும் அதிர்ச்சியடைகின்றனர். எங்கு கோபி அழுது நடித்தால் பாக்யா அவருடன் சென்றுவிடுவாரோ என இருவரும் நினைக்கின்றனர். பாக்யாவும் கோபியை கண்டதும் ஒருகணம் இவருக்குள்ளும் கொஞ்சமாவது ஃபீலிங் இருக்குபோல. ஆனாலும் நானே போய் பேசமாட்டேன் என நினைத்துக் கொள்கிறார். கோபியும் நான் உன்னிடம் கெஞ்ச வரவில்லை. மகள் இனியாவை நினைத்து வருத்தப்பட்டு தான் வந்தேன். நீ வீட்டில் உள்ள அனைவரும் வந்து கூப்பிட்டும் வராமல் வீட்டில் உனக்கான முக்கியத்துவம் என்ன என்பதை தெரிய வேண்டும் என்பதற்காக வராமல் இருக்கிறாயா என கேட்பது போல இன்றைய எபிசோடு முடிவடைகிறது. 


நாளைய எபிசோடிலும் கோபி - பாக்யா இடையேயான பேச்சுவார்த்தை தான் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண