மானஸி :
2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் 8 போட்டியில் பங்குப்பெற்றதன் மூலம் புகழ்பெற்றவர் மானஸி.சென்னையை சேர்ந்த மானஸி ஆறு வயதில் இருந்தே இசை மற்றும் பரதம் இரண்டிலும் படு சுட்டியாம்.இவரது பெற்றோர் சிறு வயதிலேயே பல போட்டிகளில் பங்கேற்க மானஸியை ஊக்கப்படுத்தியுள்ளனர்.முதன் முதலாக மானஸி 9 வயதில் பாட்டுப்போட்டி ஒன்றில் பங்கேற்ரு , பரிசை தட்டிச்சென்றாராம். அங்குதான் இவரது இசைப்பயணத்திற்கான தொடக்கம் இருந்திருக்கிறது. 2017ஆம் ஆண்டு பொதிகை டிவி தொகுத்து வழங்கிய குயில் தோப்பு என்ற சிங்கிங் நிகழ்ச்சில் பங்கு பெற்று அந்த போட்டியில் வெற்றியும் பெற்றார். அதன் மூலம் இவருக்கு பரிசு தொகையாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.மானஸியின் குரல் திறனை வெளிக்கொண்டு வர சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பெரிதும் உறுதுணையாக இருந்தது எனலாம் . மானஸிக்கு தற்போது இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
சென்சிட்டிவ் மான்ஸி :
மானஸி அருமையாக பாடுவார். அதே போல செட்டில் அமைதியாக இருப்பார். ஆனால் நண்பர்கள் வட்டாரம் என வந்துவிட்டால் குறும்புப்பெண்ணாம் . மானஸி என்னதான் போல்டாக இருந்தாலும் அவர் ரொம்ப செண்சிடிவான பெண் என்கிறார் . காரணம் அவர் இமைக்கா நொடிகள் படம் பார்த்துவிட்டு , அதில் விஜய் சேதுபதி இறக்கும் சீனில் கதறி கதறி அழுதாராம் . விஜய் சேதுபதியை அடிக்காதீங்க... அப்பா அடிக்க வேண்டாம்னு சொல்லுங்க என தியேட்டரே வேடிக்கை பார்க்கும் அழவிற்கு கதறி அழுதாராம் . அந்த நாளை தனது வாழ்நாளில் மறக்கவே முடியாது என்கிறார் மானஸி .