பாக்கியலட்சுமி சீரியலில் இன்று ஒளிபரப்பாகும் எபிசோடில் கோபி மீண்டும் ராதிகா பற்றி அவர் அண்ணனிடம் விசாரிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யா தான் தன் மனைவி என போதையில் கோபி ராதிகாவிடம் உளறியது, ராதிகா - கோபி இடையேயான சண்டை, நடுவில் ராதிகாவின் முதல் கணவன் ராஜேஷின் எண்ட்ரி, கோபி வீட்டில் உண்மை தெரிந்தது, அவர் விபத்தில் சிக்கியது, பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது, அவரை நடுவீட்டுல் நிற்க வைத்து கேள்வி கேட்டது, பாக்யா வீட்டை விட்டு வெளியேறியது என இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் தொடர்ந்து நகர்கிறது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம். 


ஆபீஸில் இருக்கும் பாக்யாவிடம், செல்வி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். இந்த சம்பவத்தை போலீஸ் ஸ்டேஷனில் சொல்ல வேண்டும் என்றும், அப்போது தான் ஒரு முடிவு கிடைக்கும் என கூறுகிறார். இதனையடுத்து கோபிக்கு போன் செய்யும் ராதிகாவின் அண்ணன் சந்துரு அவரின் உடல்நிலை குறித்து விசாரிக்கிறார். பதிலுக்கு ராதிகா, மயூ பற்றி கோபி விசாரிக்கிறார். அப்போது அவர்கள் இருவரும் நாளை ஊரை விட்டு செல்வதாக ராதிகா அண்ணன் கூறுகிறார். போனை வைத்த பிறகு அண்ணனிடம் யாரிடம் பேசினாய் என ராதிகா கேட்க, கோபி தான் போனில் பேசியதாக கூறுகிறார். 


உடனே ராதிகாவும் கோபியின் உடல்நிலை பற்றி கேட்கிறார். உடனே சந்துரு ராதிகாவுக்கு அறிவுரை வழங்குகிறார். ஆனால் எதையும் கேட்கும் மனநிலையில் தான் இல்லை என்பது போல ராதிகா பதிலளிக்கிறார். இதனைத் தொடர்ந்து கோபியின் அம்மா ஈஸ்வரி, கணவர் மூர்த்தியிடன் குடும்பத்தில் ஏன் இப்படி நடக்க வேண்டும். ராதிகா தான் எல்லாத்துக்கும் காரணம் என கூறுகிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மூர்த்தி கோபிக்கு அறிவு இல்லையா...இதெல்லாம் அவனுக்கு முன்கூட்டியே தெரியாமலா இருக்கும். இந்த விஷயத்தில் அவன் செய்தது முழுக்க முழுக்க தப்பு என குற்றம் சாட்டுகிறார். அதற்கு ஈஸ்வரி கோபி தனது பிள்ளைகள் முன்னால் அவமானப்பட்டதை எண்ணி ஏதாவது தவறான முடிவை எடுத்து விடுவானோ என தான் பயப்படுவதாக கூறுகிறார். அவரை மூர்த்தி சமாதானப்படுத்துகிறார். 


பின் எழிலுக்கு போன் செய்து மூர்த்தி பாக்யா நிலை குறித்து மூர்த்தி கேட்பது போல இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. வழக்கம்போல இந்த வாரமும் வாரக் கடைசியில் தான் பாக்கியலட்சுமி நாடகம் சூடுபிடிக்கும். அதுவரை இப்படி சோக காட்சிகள் தான் ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண