விஜய் டிவி ரசிகர்களின் அபிமான சீரியல்களின் வரிசையில் முன்னணியில் இருக்கும் ஒரு தொடர் பாக்கியலட்சுமி. மிகவும் கலகலப்பாகவும் பரபரப்பாகவும் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் நேற்று மாலினி, செழியனிடம் தனது விருப்பத்தை சொல்ல, ஷாக்கான செழியன் இதெல்லாம் சரியில்ல என்கிறான். மாலினி அதற்காக நான் உங்களை ஜெனியை விட்டுட்டு வர சொல்லவில்லை. எனக்கு உங்களை பிடித்திருக்கிறது ஐ லைக் யூ என்கிறார்கள். அளவுக்கு அதிகமாக குடித்த செழியன் ஸ்டெடியாக நிற்க கூட முடியாமல் அங்கிருந்து வீட்டுக்கு கிளம்பி வந்து விடுகிறான். 


 



ராதிகாவும் மயூவும் ரூமில் இருக்கும் போது ராதிகாவின் அம்மா போன் மூலம் பாண்டிச்சேரியில் நடைபெற இருக்கும் திருமணம் பற்றி ஞாபக படுத்துகிறார். கோபி வந்ததும் அவரிடம் உறவுகாரங்க திருமணத்துக்காக மூணு நாள் பாண்டிச்சேரி போகணும். திருமணத்தை ரொம்ப கிராண்டா பண்ணறாங்க என்கிறாள். நீயும் அம்மாவும் போயிட்டு வாங்க என கோபி சொல்ல ராதிகா இல்ல நீங்க வாங்க என சொல்ல மறுக்கமுடியாமல் ஒத்துக்கொள்கிறார் கோபி.


பாக்கியா எழில் மற்றும் இனியாவிடம் பாண்டிச்சேரிக்கு சமையல் ஆர்டருக்காக போவது பற்றி சொல்கிறாள். நாங்கள் அனைவரும் இனியாவை பத்திரமாக பார்த்து கொள்கிறோம் நீ தைரியமா போயிட்டு வா என தாத்தா சொல்கிறார். எழில் மிகவும் சந்தோஷப்படுகிறான். எனக்கும் சந்தோஷம் தான் மா ஆனால் எக்ஸாம் சமயத்தில் நீ என்னுடன் இல்லாதது தான் வருத்தமாக இருக்கிறது என்கிறாள் இனியா. பாக்கியாவும் நான் இரண்டு விஷயத்தை நினைத்து தான் கவலைப்பட்டேன். ஒன்று இவ்வளவு பெரிய ஆர்டரை என்னால் செய்ய முடியுமா என்பது மற்றொன்று எக்ஸாம் சமயத்தில் உன்னுடன் இல்லாமல் வெளியில் போவது. இது தான் என் கவலையாக இருந்தது என்கிறாள் பாக்கியா.   அம்மா நீ டெய்லி எனக்கு கால் பண்ணி ஆல் தி பெஸ்ட் சொல்லு அது போதும் என்கிறாள் இனியா.  


 



இரவு அனைவரும் தூங்கிய பிறகு செழியன் நன்றாக குடித்து விட்டு வீட்டுக்கு வந்து கதவை தட்டியதும் பாக்கியா கதவை திறக்க செழியன் மீண்டும் குடித்துவிட்டு வந்ததை பார்த்து ஷாக்காகிறார். ஏன் இப்படி தினமும் குடித்துவிட்டு வருகிறாய். நேற்று தானே இனி நீ குடிக்க கூடாது என சொன்னேன். பாக்கியா செழியனை திட்ட மனசு தாங்காமல் அம்மாவை கட்டிப்பிடித்து அழுத விடுகிறான். எங்களிடம் இருந்து ஏதாவது நீ மறைக்கிறாயா என செழியனிடம் கேட்கிறாள் பாக்கியா. இனிமேல் நீ குடிக்க கூடாது என சத்தியம் வாங்கி கொள்கிறாள்.


அடுத்த நாள் காலையில் ராதிகாவும் கோபியும் ஒரு பக்கம் பாண்டிச்சேரி கிளம்ப, மயூவை பாட்டியுடன் தங்க சொல்லி அழைத்து செல்கிறார்கள். ஈஸ்வரி சாமிக்கு பூஜை செய்துவிட்டு பாக்கியாவை ஆசீர்வாதம் செய்கிறார். பாக்கியாவும் பாண்டிச்சேரி செல்ல தயாராக இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவுக்கு வருகிறது.