விஜய் டிவியின் மிகவும் பிரபலமான சீரியலான பாக்கியலட்சுமி சீரியலில் நேற்றைய எபிசோடில் பாக்கியாவை ராதிகா அவமானப்படுத்துகிறார். அதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.
எழில், பாக்கியா இருக்கும் இடத்துக்கு வந்து சர்ப்ரைஸ் கொடுக்கிறான். எழிலை, பழனிச்சாமி சுதாகரிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். எழிலிடம் வீட்டில் இருப்பவர்கள் பற்றி விசாரிக்கிறார். மறுபக்கம் ராதிகாவுக்கு கோபி நெக்லஸ் ஒன்றை பரிசளிக்கிறார். அதை பார்த்து சந்தோஷத்தில் மிதக்கும் ராதிகா.
பாக்கியா கால் வலிக்கிறது என சொன்னதால் எழில் அம்மாவின் காலை அமுக்கி விடுகிறான். "வீட்டில் எதுவும் பிரச்சனை இல்லையே" என பாக்கியா எழிலிடம் கேட்கிறாள். பிரச்சனை செய்பவர்கள் தான் வீட்டில் இல்லையே பிறகு என்ன பிரச்சனை இருக்கும் என சொல்ல, உடனே செல்வி அவங்க தான் இங்க இருக்காங்களே என சொல்ல அதிர்ச்சி அடைகிறான் எழில். பாக்கியா எழிலிடம் நீ அவரை பார்த்தால் எதுவும் பிரச்சனை செய்யக்கூடாது என சத்தியம் வாங்கி கொள்கிறாள்.
கோபி எழிலை பார்த்து அவனிடம் வந்து புலம்புகிறார். "உங்க அம்மா பண்ற வேலையை பாத்தியா. ஒரே அசிங்கமா இருக்கு" என சொல்ல, எழில் உடனே "நீங்க எங்க அம்மாவை மிஸ் பண்றீங்களா?" என கேட்கிறான். சீ சீ... என சொன்ன கோபி "அப்போ நீங்க அவங்கள பார்த்து பொறாமைப்படுறீங்க. எங்க அம்மா உங்கள விட்டுட்டு வந்த பிறகுதான் அவங்க திறமை வெளியே வருது. அவங்கள நீங்க இடியட் இடியட் என சொல்லி வீட்டிலேயே வைச்சு இருந்தீங்க. அவங்கள எல்லாரும் பாராட்டுறது உங்களுக்கு பொறாமையா இருக்கு அதுதான்" என்கிறான் எழில். "இல்ல இல்ல அந்த லேம்ப் போஸ்ட் வர இடத்துக்கு எல்லாம் இவளும் வரணுமா" என கடுப்பாகி பேசிய கோபியை நோஸ் கட் செய்து விடுகிறான் எழில்.
கோபி மற்றும் ராதிகா, சுதாகர் மற்றும் அவர்களின் உறவினர்களோடு பேசி கொண்டு இருக்கிறார்கள். அப்போது விருந்தாளிகள் அனைவருக்கும் காபி பரிமாறப்படுகிறது. அனைவரும் பாக்கியாவின் சாப்பாட்டையும் காபியையும் பாராட்டி தள்ளுகிறார்கள். அதை பார்த்து கடுப்பில் வெந்து போகிறார்கள் ராதிகாவும், கோபியும். கல்யாணத்துக்கு வந்த அனைவரும் சமையலை பற்றித்தான் பெருமையாக பேசுகிறார்கள்.
மாப்பிள்ளை வீட்டு உறவினர்கள் சில நாளை மலேசியாவில் இருந்து வருவதாக சுதாகரின் சம்பந்தி சொல்ல, உடனே கோபி ஒரு ஐடியாவை இன்ஸ்டன்ட்டாக ரெடி செய்து விடுகிறார். "மலேசியாவில் ஃபுட் ரொம்ப நல்ல இருக்கும். செஃப் என்றால் அனைத்து ஊர்களில் டிஷ்களையும் நன்றாக சமைப்பார்கள். வரும் விருந்தாளிகளுக்கு நீங்கள் பாராட்டிய செஃப்பையே மலேசியன் புட் ரெடி செய்ய சொல்லலாம்” என பாக்கியாவுக்கு புதிய பிரச்சனையை உருவாக்குகிறார் கோபி. இது பெரிய பிளானால்ல இருக்கு என சுதாகர் மனதுக்குள் நினைத்துக் கொள்கிறார். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வருகிறது.