பாக்கியலட்சுமி சீரியலில் இன்று நடக்கும் எபிசோடில் கோபி ராதிகாவிடம் கெஞ்சும் காட்சிகள் இடம் பெறுகிறது.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறிய காட்சிகள் இடம் பெற்றது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
நகையை விற்கும் பாக்யா
மகளின் ஸ்கூல் பீஸ் கட்ட வாடிக்கையாளர்களிடம் செல்வி வாங்கப்போன பணத்தை எதிர்பார்த்து பாக்யா காத்திருக்கிறார். ஆனால் செல்வி ரூ.5 ஆயிரம் மட்டுமே வசூல் செய்ததாகவும், மத்தவங்க இப்ப தர முடியாதுன்னு சொல்லிட்டாங்க என தெரிவிக்க பாக்யா அதிர்ச்சியடைகிறார். இது பீஸ் கட்ட போதாது என கூறி வளையலை விற்க முடிவு செய்கிறார். அதன்படி விற்ற பணத்தை கொண்டு பாக்யா இனியா படிக்கும் பள்ளிக்கு செல்கிறார். நடுவில் படத்தின் கதை தொடர்பாக எழிலுக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்படுகிறது. பின்னர் அவரை சமாதானப்படுத்தும் அம்ரிதா பாக்யா குறித்து வருத்தப்படுகிறார்.
எழில் உடனே இனியா பள்ளியில் பீஸ் கட்ட நடைபெற்ற சம்பவங்களை கூறுகிறார். பின்னர் அம்ரிதா அறிவுறுத்தல்படி பாக்யாவுக்கு போன் செய்யும் எழில் பணம் கிடைத்ததா என கேட்கிறார். ஆனால் பாக்யா வளையல் விற்றதை சொல்லாமல் பணம் இருப்பதாகவும், நேரில் வரும் போது எல்லாவற்றையும் சொல்கிறேன் என தெரிவித்து விட்டு பள்ளிக்கு புறப்படுகிறார்.
ராதிகாவை சந்தித்த கோபி
இதற்கிடையில் மயூவை பள்ளியில் சேர்க்க அங்கு வரும் ராதிகா, ஏற்கனவே இனியா ஸ்கூல் பீஸ் கட்ட வந்த கோபியை சந்திக்கிறார். அவரிடம் தான் மும்பைக்கு செல்ல இன்னும் நாட்கள் இழுக்கும் என்பதால் மயூவை பள்ளியில் சேர்க்க கேட்க வந்ததாகவும் கூறுகிறார். இதனைக் கேட்டு மகிழும் கோபி தான் எல்லாருக்கும் மகிழ்ச்சியை கொடுத்தாலும், தனக்கு யாரும் மகிழ்ச்சி கொடுக்கவில்லை என கூறுகிறார். மேலும் இனியாவுக்கு பீஸ் கட்ட இன்னைக்கு தான் கடைசி நாள் என மெசெஜ் வந்தது. ஒரு தடவை கூட இப்படி நடந்தது இல்லை என சொல்ல ராதிகா கோபிக்கு மகள் மேல் இருக்கும் பாசத்தை கண்டு நெகிழ்ந்து போகிறார். இப்படி பேசிக் கொண்டிருக்கையில் பாக்யா பள்ளிக்கு வருகிறார். அவர் நேரடியாக அலுவலகத்திற்கு சென்று பீஸ் கட்ட வந்திருப்பதாக கூறுகிறார். ஆனால் ஏற்கனவே பீஸ் கட்டியாச்சு என சொல்ல பாக்யா குழம்பி போகிறார்.
பின்னர் இனியாவை சந்தித்து அப்பாவை வந்து பீஸ் கட்ட சொன்னியா என கேட்க நான் எதுவும் சொல்லவில்லை. அவராகவே வந்து பீஸ் கட்டுனாரு என சொல்கிறார். பின்னர் தான் ஸ்கூல் முடிஞ்சி உன்னையும் கூப்பிட்டு போறேன்னு சொல்ல இனியா அவரது பேச்சை உதாசீனப்படுத்தி ஒன்னும் தேவை இல்லை. நான் வேன்ல வந்துடுவேன் என கூறுகிறார். இதன் பின்னர் மயூ சேர்க்கை தொடர்பாக பேசிவிட்டு திரும்ப வரும் பாக்யாவை கோபி கையை பிடித்து இழுத்து பேசுகிறார்.
கையை விடுங்க என ராதிகா டென்ஷனாக, நீ கை விட மாட்டேன்னு சொல்லு என ரைமிங்காக கோபி பேசுகிறார். நீங்க பண்றது குழந்தைத்தனமா இருக்கு என ராதிகா சொல்ல, நான் உனக்காக தான் டைவர்ஸ் பண்ணேன், எல்லாரையும் விட்டு வந்தேன்னு சொல்ல ராதிகா ஆத்திரமடைகிறார். உடனே அவர் நான் உங்களை காதலிச்சது உண்மை தான். கல்யாணம் பண்ண நினைச்சது உண்மை தான். ஆனால் இதெல்லாம் நீங்க டீச்சரோட (பாக்யா) கணவர்ன்னு தெரிறதுக்கு முன்னாடி.அப்பவே தெரிஞ்சிருந்தா நான் இப்படி பழகிருக்கவே மாட்டேன், டைவர்ஸ் வர விட்டுருக்கவும் மாட்டேன் என தெரிவிக்கிறார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடையும் கோபி, எப்பபாரு டீச்சர்..டீச்சர்...அவ டீச்சர் இல்ல என்னோட டார்ச்சர்... இப்ப னக்கு என்னோட வாழ ஆசை இருக்கா இல்லையா என உண்மையை சொல்லு என கோபி கேட்க, ராதிகா ஆமா என்கிறார். இத்தோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.