பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா ஊருக்கு செல்லும் முடிவில் மாற்றம் இருப்பதாக கூறும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாகவுள்ளது.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறிய காட்சிகள் இடம் பெற்றது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
பணம் இல்லாமல் தவிக்கும் பாக்யா
இனியா தனக்கு ஸ்கூல் பீஸ் கட்ட இன்றே கடைசி நாள் என்றும், எல்லாத்தையும் நீதான பாத்துக்கிறேன்னு சொல்லி அப்பா கிட்ட சவால் விட்ட என கூறி பாக்யாவை நக்கலடிக்கிறார். இதனைக் கேட்டு மூர்த்தி தன்னிடம் பணம் இருப்பதாகவும், படிப்பு விஷயத்தில் யோசிக்க வேண்டாம் என்று கூறி உதவ முன் வருகிறார். ஆனால் பாக்யா எல்லா கஷ்டமான சமயத்திலும் தன்னுடன் இருப்பதற்கு நன்றி தெரிவித்து தன்னிடம் பணம் இருப்பதாகவும், தேவைப்பட்டால் கேட்பதாகவும் கூறுகிறார்.
பின்னர் ஆபீஸிற்கு சென்று கணக்கு பார்க்கும்போது பீஸ் கட்ட தேவைப்படும் பணம் குறைவாக இருப்பதாக கூறி எழிலிடமும், செல்வியிடமும் வருத்தப்படுகிறார். எழில் தனது பட தயாரிப்பாளரிடம் பேசி பணம் வாங்கி தருவதாக சொல்ல அதை மறுக்கும் பாக்யா, உங்க அப்பா இருந்திருந்தா இந்நேரம் பீஸ் கட்டுறதுன்னு ஒரு பேச்சே வந்துருக்காது என கூறுகிறார்.
எஸ்கேப் ஆக நினைக்கும் செழியன்
இதற்கிடையில் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் செழியன், ஜெனியிடன் அவரது அம்மா மரியம் பேசியது குறித்து வருத்தப்பட்டு பேசுகிறார். அப்போது ஜெனி டென்ஷனாகி இந்த வீட்டில் நீ மூத்தப் பையன் தானே. இனியா உன் தங்கச்சி தானே. ஏன் அவளுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட பணம் கேட்டப்ப எதுவுமே பேசாம இருக்க. நான் கட்டுறேன்னு சொல்லாம இந்த குடும்பத்துக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி விலகி இருக்க என கூறி ஆதங்கப்படுகிறார்.
அதற்கு செழியன், எங்க அம்மா (பாக்யா) திமிருக்காகவே இதை செய்ய மறுப்பதாகவும், இனியாவுக்கு செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என சொல்லி சமாளிக்க இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. செழியன் கடுப்பாகி அங்கிருந்து நகர்கிறார். இதன் பின்னர் ஹோட்டலில் ரூம் போட்டு தங்கியிருக்கும் கோபியை அவ்வழியாக செல்லும் ராதிகா பார்த்து வருத்தப்படுகிறார். தன்னை பார்க்காமல் இருந்தால் கோபிக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்காதே..டீச்சர் ஏன் இப்படி பண்ணாங்க..கடவுளே கோபி நிலைமை சீக்கிரம் சரியாகணும் என கடவுளிடம் வேண்டிக் கொள்கிறார்.
பின்னர் வீட்டுக்கு செல்லும் அவர் மும்பை செல்லும் பணிகள் இன்னும் 2, 3 மாதங்களுக்கு இழுக்கும் என்பதால் மயூவை அவள் முன்னால் படித்த பள்ளியிலேயே சேர்க்கலாம் என கூறுகிறார். இதனைக் கேட்டு மயூ மகிழ்ச்சியடைகிறாள். பின்னர் தான் கோபியை பார்த்ததாக தனது அம்மாவிடமும், அண்ணனிடமும் கூற இன்றைய எபிசோடு முடிவடைகிறது. அடுத்த எபிசோடில் இனியாவை சந்திக்க வரும் கோபியும், மயூவை மீண்டும் பள்ளியில் சேர்க்க வரும் ராதிகாவும் சந்திக்கும் காட்சிகள் இடம் பெறவுள்ளது.