பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்து பெற்ற நிலையில் பாக்யா மீண்டும் கோபி வீட்டுக்கு வந்த நிலையில் அவரை குடும்பத்தினர் சமாதானப்படுத்தும் காட்சிகள் இன்று இடம் பெறுகிறது. 


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் வீட்டை விட்டு வெளியேறிய பாக்யாவை குடும்பத்தினர் வந்து சமாதானப்படுத்தியது, குழந்தைகளுக்காக பாக்யா மீண்டும் வீட்டுக்கு வந்தது, கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது போன்ற காட்சிகள் இடம் பெற்றது.  இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.  


விவாகரத்து பெற்ற நிலையில் பாக்யாவுக்கு இனி இந்த வீட்டில் இடமில்லை என கோபி கூறும் போது பாக்யா மீண்டும் வீட்டிற்குள் நுழைகிறார். ராதிகாவை திருமணம் செய்ய முனைப்பில் இருக்கும் கோபிக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைகிறது. அதனால் அவர் பாக்யாவை சரமாரியாக விமர்ச்சிகிறார். கோர்ட்டில் நடந்து கொண்டதை வைத்து அவரை எப்படியாவது வெளியேற்றி விடலாம் என நினைக்கிறார். ஆனால் குடும்பத்தினர் பாக்யாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்குகின்றனர். 


இளைய மகன் எழில், பாக்யாவை டிரெஸ் எல்லாம் எடுத்துட்டு வாங்க போலாம் என்கிறார். உடனே கோபி இங்க இருக்குறது எல்லாமே என்னுடைய காசுல வாங்குனது. உன்னுடையதெல்லாம் ஒன்னுமில்ல..வீட்டை விட்டு வெளியே போ என்கிறார். ஈஸ்வரி உடனே பாக்யாவை சொல்ல சொல்ல கேட்காமல் விவாகரத்து வாங்கிட்டியே..இப்ப ஒரேடியா வீட்டை விட்டு போலாம்ன்னு முடிவு பண்ணிட்டியா என அவரும் தன் பங்கிற்கு திட்டுகிறார். உடனே கோபி பாக்யா இத்தனை நாள் இந்த வீட்டுல சமையல்காரியா மட்டும் தான் இருந்தா.. அங்க இருக்க செல்விக்கும் இவளுக்கும் வித்தியாசம் இல்ல என சொல்ல எழில், பாக்யா ஆத்திரத்தின் உச்சிக்கே செல்கின்றனர்.  பாக்யாவை எழில் இதுக்குமேல இங்க இருக்க வேண்டாம் என சொல்ல பாக்யா தன் உடைகளை எடுக்க செல்கிறார். 


இதற்கிடையில்  செல்வியிடம் நீயாவது பாக்யாவிடம் சொல்லலாம்ல என ஈஸ்வரி  கேட்க, கோபி குறுக்கிட்டு அவளை ஏத்தி விட்டு வேடிக்கை பாக்குறது எழிலும்,செல்வியும் தான் என தெரிவிக்கிறார். ஈஸ்வரி செல்வியிடம் உன் கணவர் தப்பு பண்ணா இப்படி செய்வீயா என கேட்க, அவரோ நான் அப்படி ஏதாவது நடந்துச்சின்னா எப்பவோ விவாகரத்து பண்ணிருப்பேன். பெண்களுக்கு சுயமரியாதை தான் முக்கியம் என கூறுகிறார். இதனையடுத்து கோபி பண்ணதும் பாக்யா பண்ணதும் சரிதானா என செழியன் -எழில் இடையே வாக்குவாதம் எழுகிறது. உடனே எழில் அப்பாவுக்கு சப்போர்ட் பண்றல, நீ கல்யாணம் ஆகி இன்னொரு பொண்ணு கூட ரிலேஷன்ஷிப்ல இருந்தா ஜெனி ஏத்துபாங்கலா சொல்லு..இல்லல...அப்ப ஏன் அப்பா பண்ணதை நியாயப்படுத்துற என கேட்க இருவரையும் ஜெனி சமாதானப்படுத்துகிறார்.


பெட்டியுடன் வரும் பாக்யாவை இனியா தடுத்து எங்கேயும் போக வேண்டாம் என கெஞ்சுகிறார். ஜெனி, செழியன் என அனைவரும் கெஞ்ச கோபி மட்டும் பாக்யா வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கிறார். இப்படி இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. ஒருவேளை பாக்யா மகளுக்காக மனசு மாறினால் கோபி நிலைமை என்னாகும் என ரசிகர்கள் தங்கல் யூகங்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண