பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களான பாவனிக்கும், அமீருக்கும் கல்யாணம் நடப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ரெட்டைவால் குருவி' சீரியலின் மூலம் அறிமுகமான பாவனி, அதே சேனலில் ஒளிபரப்பான சின்னத்தம்பி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அவரது காதல் கணவரின் தற்கொலையால் மன அழுத்தத்தில் இருந்த பாவனி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் கலந்து கொண்டார்.இதே சீசனில் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் வந்த நடன இயக்குநர் அமீர் ஆரம்பத்தில் இருந்தே பாவனியுடன் நெருங்கி பழகினார். பிக்பாஸின் போது பாவனிக்கு முத்தம் கொடுத்தது, அவரை காதலிப்பதாக கூறியது என இந்த ஜோடி பல சர்ச்சைகளில் சிக்கியது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஒன்றாக பல இடங்களுக்கு இவர்கள் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. ஆனாலும் பாவனி அமீரின் காதலை ஏற்றுக்கொள்ளவேயில்லை. இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் இருவரும் இணைந்து நடனமாடி வருகின்றனர். அமீர்- பாவனி காதல் நாளுக்கு நாள் வலுவாகி வரும் நிலையில் கல்யாணம் செய்தால் முதல் கணவருக்கு நிகழ்ந்த மாதிரி ஏதாவது அசம்பாவிதம் அமீருக்கும் நடந்து விடுமோ என நினைப்பதாக பாவனி தெரிவித்தார்.
இதனிடையே வரும் வாரம் இந்நிகழ்ச்சி “wedding Round" என்ற தலைப்பில் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் ரீல் மற்றும் ரியல் ஜோடிகள் கலந்து கொண்டுள்ள நிலையில் அமீரும் பாவனியும் இருவரும் நடனம் ஆடி திருமணம் செய்துக் கொள்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. பின்னணியில் அலைபாயுதே படத்தில் வரும் மாங்கல்யம் திருமண பாடல் ஒலிக்கும் நிலையில் அப்பளம் உடைப்பது போன்ற திருமண சடங்குகளிலும் இந்த ஜோடி செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அமீர்-பாவனியின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்