பாக்யலட்சுமி சீரியலில் ராதிகா வீட்டுக்கு செல்லும் ஈஸ்வரி அவரை திட்டி தீர்க்கும் காட்சிகள் இன்று இடம் பெறவுள்ளது. 


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் வீட்டை விட்டு வெளியேறிய பாக்யாவை குடும்பத்தினர் வந்து சமாதானப்படுத்துவது, குழந்தைகளுக்காக பாக்யா மீண்டும் வீட்டுக்கு வந்தது, கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுக்க முன்வந்தது போன்ற காட்சிகள் இடம் பெற்றது.  


விவாகரத்து வாங்க கோர்ட்டுக்கு வந்த பாக்யாவிடம், அப்பா இங்கு வருவாரா என மகன் எழில் கேட்கிறார்.அதற்கு அவர், நான் பேசிய பேச்சுக்கெல்லாம்..எவ்வளவு திமிர் இருந்தா இப்படி சொல்லிருப்பான்னு சொல்லி கண்டிப்பா வருவாரு என பதிலளிக்கிறார். அடுத்தாக ராதிகா வீட்டுக்கு வேலைக்காரி செல்வியுடன் போகும் கோபியின் ஈஸ்வரி அவரை கடுமையாக திட்டி தீர்க்கிறார். கோபியுடன் வாழ பாக்யாவுக்கு பணம் கொடுத்து உதவி செய்தாயா?, ஒரு பக்கம் வந்து நல்ல பொண்ணு மாதிரி இருந்துட்டு மறுபக்கம் பாக்யாவுக்கு துரோகம் செஞ்சிட்டியே என ஆத்திரத்தின் உச்சிக்கே செல்கிறார். 


அவரை தடுக்க நினைக்கும் ராதிகாவின் அம்மாவையும், அண்ணனையும் சரமாரியாக விமர்சிக்கும் ஈஸ்வரி உனக்காக பாக்யா என்னெல்லாம் பண்ணிருக்கா தெரியுமா என கூறி முன்பு நடந்தவற்றையெல்லாம் விவரிக்கிறார். இதனை கேட்டு ராதிகா குற்ற உணர்ச்சியில் நொந்து போகிறார். இறுதியாக ராதிகாவின் குழந்தை மயூ ஈஸ்வரியிடம் சண்டை போடாதீங்க பாட்டி என கூற அவளை தள்ளிவிட்டு நீங்க எல்லாருமே விஷ பாம்புகள் என சகட்டுமேனிக்கு திட்டுகிறார். இறுதியாக ராதிகா குடும்பத்தினரை இருக்கும் இடம் தெரியாமல் காணாம போயிருவீங்க என மிரட்டும் ஈஸ்வரி மண்ணை அள்ளி தூற்றி சாபமிட்டு செல்கிறார். 


இதனையடுத்து ராதிகா அம்மா அவரிடம் நீ கோபியை தான் கல்யாணம் பண்ணனும். எல்லாரும் உன்னை திட்டத்தான் செய்றாங்க. நீ செஞ்ச தியாகம் பற்றி யாருக்கும் தெரியப் போறதுல்ல என கூறுகிறார். ஆனால் ராதிகாவோ கோபியால் ஏற்பட்ட பிரச்சனையால் நொந்து போய் இருப்பது போல இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண