பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உண்மை பாக்யாவுக்கு தெரிந்த நிலையில் அவர் அடுத்து எடுக்கப்போகும் முடிவு என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யா தான் தன் மனைவி என போதையில் கோபி ராதிகாவிடம் உளறியது, கோபியின் மீதான சந்தேகத்தால் அவரது போனை பாக்யா சோதனை செய்தது. ராதிகா - கோபி இடையேயான சண்டை, நடுவில் ராதிகாவின் முதல் கணவன் ராஜேஷின் எண்ட்ரி, கோபி வீட்டில் உண்மை தெரிந்தது, அவர் விபத்தில் சிக்கியது என இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என பார்க்கலாம். 


மருத்துவமனையில் கோபியின் மனைவி யார் என நர்ஸ் எழுப்பிய கேள்விக்கு ராதிகா பதிலளித்ததை பார்த்து பாக்யாவுக்கு இருவருக்குமிடையேயான உறவு தெரிய வந்துள்ளது. அந்த  அதிர்ச்சியடையோடு வெளியே செல்லும் பாக்யா சாலையில் நடுரோட்டில் செல்கிறார். அப்போது அவரை வாகன ஓட்டிகள் திட்டிக் கொண்டே செல்கிறார்கள். இதற்கிடையில் கோபி மருத்துவமனையிலுள்ள நர்ஸிடம் தன்னை கொண்டு வந்து அனுமதித்தது யார் என கேள்வி எழுப்புகிறார். 


அதற்கு ஆட்டோ டிரைவர் ஒருவர் அழைத்து வந்தார் என்றும், நீங்கள் உங்கள் மனைவி நம்பர் என கொடுத்த எண்ணில் நான் போன் செய்து விஷயத்தை சொன்னேன். ராதிகா மிகவும் பயந்துக் கொண்டே வந்தார் எனவும் தெரிவிக்கிறார். பின்னர் கோபி நர்ஸிடம் இருந்த தனது போனை வாங்கி தனது மூத்த மகன் செழியனிடம் விபத்து நடந்த விஷயத்தை தெரிவிக்க அவரது தந்தை மூர்த்தி, வேலைக்காரி செல்வி தவிர மற்ற அனைவரும்  மருத்துவமனைக்கு செல்கின்றனர். அங்கு கோபி தனது அம்மா ஈஸ்வரியிடம் எதற்கு என்னை அவசரமாக வரச் சொன்னீங்க என கேட்க, இப்போது இதுபற்றி பேச வேண்டாம் என ஈஸ்வரி தெரிவிக்கிறார். 


இதற்கிடையில் தன்னிலை மறந்து செல்லும் பாக்யா எழில், பாண்டியன் ஸ்டோர்ஸ் - பாக்கியலட்சுமி சங்கமம் நிகழ்வின்போது தனம் சொன்னது, வேலைக்காரி செல்வி, ராதிகா என அனைவரும் கோபியைப் பற்றி சொன்னதை நினைத்தும், தன்னிடம் கோபி   நடந்து கொண்டதையும் யோசித்துக் கொண்டே செல்வது போல இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. ஒருவழியாக கோபி-ராதிகா உறவு பாக்யாவுக்கு தெரிந்து விட்டது. இதுவரை சாந்தமாக இருந்த  பாக்யாவின் ஆட்டம் இனி தான்  ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண