விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடில் இனியா வேகவேகமாக ரூமுக்கு சென்று கதவை மூடிக்கொள்கிறாள். “அனைவரும் கதவைத் திறக்க சொல்லியும் முடியாது என்கிறாள். நான் யாரிடமும் பேச விரும்பவில்லை அம்மா கிட்ட இனிமே பேசவே மாட்டேன்” என்கிறாள். 


பாக்கியா வெளியிலிருந்தே “என்னை மன்னித்துவிடு இனியா” என எவ்வளவு கெஞ்சியும் கதவை திறக்கவே இல்லை. அம்மா அழறாங்க என சொன்ன பிறகுதான் இனியா கதவை திறக்கிறாள். இனியாவிடமும் மற்றவர்களிடமும் ராமமூர்த்தி நிச்சயதார்த்த வீட்டில் நடந்தை எல்லாம் சொல்கிறார். பிறகு தான் அம்மா வரததற்கான காரணம் தெரிந்து இனியா சமாதானம் ஆகிறாள். =


“எனக்கு உன் மேல கோபம் இல்லை அம்மா. இதுவரைக்கும் எனக்கு சப்போர்ட்டா இருந்த நீ நான் பர்ஸ்ட் மார்க் வாங்கிய போது கூட இல்லையே என்ற வருத்தம் தான்” என சொல்லி அம்மாவை கட்டிப்பிடித்து அழுகிறாள். பாக்கியா “உனக்கு என்ன வேணும் சொல்லு நான் வாங்கி தருகிறேன் என இனியாவிடம் கேட்க இப்போ எதுவும் வேண்டாம் ஆனா ஒருநாள் பெருசா கேட்பேன்” என்கிறாள். 


 



கோபியும் ராதிகாவும் வீட்டுக்குச் சென்றதும் ராதிகாவின் அம்மாவிடம் கோபி நடந்ததையெல்லாம் சொல்லி பாக்கியாவை பயங்கரமா திட்டுகிறார். “என்னோட சண்டை போடுறவங்க அங்க வரல” என ராதிகா சொல்கிறாள். ஏன் வரல என ராதிகா அம்மா கேட்க “அவ கேட்டரிங் செய்கிறேன் என பொய் சொல்லிவிட்டு அந்த லேம்ப் போஸ்ட் கூட ஊரு சுத்துறா” என கோபி சொல்கிறார். “அது தான் அவளுக்கு வேலை. அவளுக்கு பசங்க, அப்பா அம்மா மேல எல்லாம் உண்மையான அக்கறை கிடையாது” என சொல்லிவிட்டு செல்கிறார். 


ஆனால் ராதிகா பாக்கியாவுக்கு சப்போர்ட்டாக “அவங்க இரெண்டு பேரும் ஒண்ணா ஸ்போக்கன் இங்கிலிஷ் கிளாஸ் போறாங்க அவ்வளவு தான் இவர் சொல்ற மாதிரி எல்லாம் ஒன்னும் கிடையாது” என்கிறாள். ஆனால் ராதிகாவின் அம்மா “அப்படி எல்லாம் யாரையும் நம்பமுடியாது. யார் எப்படிப்போன நமக்கு என்ன?” என சொல்லிவிட்டு அவரும் சென்று விடுகிறார். 


எழிலிடம் மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்வது பற்றிய பேச்சை ஆரம்பிக்கிறாள் அமிர்தா. அவளை எப்படியோ பேசி சமாளித்த எழில் சரி உனக்கு குழந்தை வேண்டும் என்ற ஆசை இருந்தா ஒரு வருஷத்துக்கு பிறகு பெத்துக்கலாம் என சொல்லி அமிர்தாவை ஆஃப் செய்துவிடுகிறான்.  



பாக்கியாவும் இனியாவும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பாக்கியா இனியாவிடம் “நீ என்ன படிக்கனுமென ஆசைப்படுறியோ அதை படி” எனக் கூற, இனியா “எனக்கு மீடியாவில் வேலை செய்யணும்னு ஆசையா இருக்கு மா” என்கிறாள். “நீ என்ன படிக்கச் ஆசைப்படுறியோ அதையே படி. பெரிய காலேஜ்ல நான் உன்னை படிக்க வைக்குறேன். நான் தான் படிக்கணும்  என ஆசைப்பட்டேன் ஆனால் படிக்க முடியல. நீ நல்ல படிச்சு பெரிய வேலைக்கு போ. பொண்ணுங்களுக்கு படிப்பும் வேலையும் ரொம்ப ரொம்ப முக்கியம். அது தான் நம்மை விட்டு என்னைக்குமே போகாது” என்கிறாள். இதைக் கேட்ட இனியா மிகவும் சந்தோஷமாக இருக்கிறாள். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வருகிறது.