விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸில் பாக்கியா, பழனிசாமி மற்றும் லோபிதா மூவரும் பேசி கொண்டு இருக்கிறார்கள்.
ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசில் இன்று டெஸ்ட் இருப்பதால் பாக்கியா படித்துக்கொண்டு இருக்கிறாள் ஆனால் பழனிசாமியும், லோபிதாவும் படிக்காததால் புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த நேரம் பார்த்து டீச்சர், அங்கு வந்து பாடத்தை எடுக்க துவங்கியதும், டெஸ்ட் வைக்கிறேன் என சொன்னதை மறந்து விட்டதை நினைத்து பழனிசாமியும் லோபிதாவும் பேசிக்கொள்கிறார்கள், அதை பார்த்து டீச்சர் என்ன பேசுறீங்க என கேட்க பழனிசாமி டெஸ்ட் வைப்பதை பற்றி சொல்லி ஞாபகப்படுத்தி விடுகிறார்.
எனக்கு பொய் சொல்ல தெரியாது அதனால் உண்மையை உளறிவிட்டேன் என பழனிசாமி சொல்ல டீச்சர் அனைவருக்கும் டெஸ்ட் பேப்பரை எடுத்து வந்து கொடுக்கிறார். ஒன்றும் தெரியாததால் பழனிச்சாமி, பாக்கியாவிடம் இருந்து பேப்பரை வாங்கி காப்பி அடிக்கிறார்.
ராதிகா ஸ்வீட் கொண்டு வந்து வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கொடுக்கிறாள். தனக்கு புரொமோஷன் கிடைத்ததாகவும் இனி இரட்டிப்பாக சம்பளம் உயர போவதை பற்றியும் தன்னுடைய அம்மாவிடம் சந்தோஷமாக கூறுகிறாள் ராதிகா. ராதிகாவின் அம்மா சரி வாங்க எல்லாரும் சாப்பிடலாம் என அழைக்க கோபி தனக்கு ஆபிஸ் விஷயமாக வெளியில் வேலை இருக்கிறது சென்று வருகிறேன் என சொல்கிறார். ராதிகா உடனே ஆபிஸ் வேலையா வெளியில போறேன் என சொல்லிவிட்டு குடிச்சுட்டு வந்தீங்கனா அவ்வளவு தான் என கோபியை மிரட்ட அதிர்ச்சி அடைகிறார். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.