விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) சீரியலின் இன்றைய எபிசோடில் பழனிச்சாமியின் அம்மா, கோபி வந்து உன்னையும் பாக்கியாவையும் பத்தி தப்பு தப்பா பேசிவிட்டு போனதாக சொல்கிறார். "என்கிட்ட பேசி பாத்தாரு, அப்புறமா மேடம் கிட்ட பேசினாரு இப்போ உங்கிட்ட வந்து பேசி இருக்காரு அதெல்லாம் நீங்க பெரிசா எடுத்துக்காதீங்க அம்மா" என பழனிச்சாமி சொல்கிறார். 


அம்மா கொடுத்த ஷாக் :


"உனக்கு பாக்கியாவை ரொம்பப் பிடிக்கும் என எனக்கு தெரியும். நான் வேணுன்னா உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைச்சுடவா" என்கிறார் அம்மா. "அப்படி ஒரு எண்ணமே எனக்கு இல்லை, மேடத்துக்கும் இருக்காது" என்கிறார் பழனிச்சாமி.


 



கோபமான எழில் :


எழில் பாக்கியாவை காலேஜ் போக தேவையான பொருட்களை வாங்குவதற்காக அழைத்துச் செல்ல தயாராகிறான். இனியாவையும் வரச் சொல்கிறான். ஆனால் இனியா “என்னை டாடி கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்காரு” என சொல்லி விடுகிறாள். அதனால் கடுப்பாகி எழில் பாக்கியாவை மட்டும் கூட்டிட்டு போகிறான். 


வெட்கமா இல்லையா கோபி?


கோபி ஒரே டையர்டாக உட்கார்ந்து கொண்டு இருக்கும் போது, ராதிகா “ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க” என கேட்க கோபி "காலையில் இருந்து ரொம்ப அலைச்சல். அந்த இடியட் தான் தலை மேல ஏறி உட்கார்ந்து கிட்டு ஆடுறா" என உளறவே, ராதிகாவுக்கு சந்தேகம் வந்து விடுகிறது.


பிறகு நடந்ததை கொஞ்சம் கொஞ்சமாக கோபி உளற, “வீட்டுல அசிங்கப்பட்டது பத்தல, ரோட்டல அவமானப்பட்டது பத்தல, இப்போ ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் வரைக்கும் போய் அசிங்கப்பட்டு வந்தீங்களா? அவங்க தான் உங்கள தூக்கி போட்டுட்டாங்க. இல்ல நீங்களும் அந்த மாதிரி இருக்க வேண்டியது தானே?” என சரியான திட்டு திட்டுகிறாள்  ராதிகா. அந்த நேரம் பார்த்து ராதிகாவின் அம்மா அவளைக் கூப்பிட, கோபி “நீ போய் என்னன்னு கேளு என்னை அப்புறம் வந்து கூட திட்டலாம்” என சொல்லி அனுப்பிவிடுகிறார். 


 



ஜாலி சண்டை :


பாக்கியாவும் இனியாவும்  அவர்கள் இருவரும் வாங்கி வந்த பொருட்களை கம்பேர் செய்து செல்ல சண்டை போடுகிறார்கள். அவர்களின் சண்டையைப் பார்த்து வீட்டில் இருப்பவர்கள் சிரிக்கிறார்கள். அடுத்த நாள் காலை இனியா காலேஜூக்கு கிளம்புகிறாள். எல்லாரும் அவளுக்கு நிறைய அட்வைஸ் கொடுத்து அனுப்புகிறார்கள். எழில் இனியாவை “பைக்கில் கொண்டு போய் விடுகிறேன்” என கிளம்ப வெளியில் காருடன் ரெடியாக கோபி காத்து கொண்டு இருக்கிறார். அவர் நிற்பதைப் பார்த்த அனைவருக்கும் ஷாக். அத்துடன் இன்றைய எபிசோட் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) முடிவுக்கு வந்தது. 


Also Read :


Ethir Neechal August 5 Promo: பரிதாபமாக பேசும் கரிகாலன்... மனம் இறங்காத ஆதிரை... ஈஸ்வரியிடம் பேசிய ஜீவானந்தம்... எதிர் நீச்சலில் இன்று!