விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியிடம் "நீங்க எப்ப பார்த்தாலும் உங்க குடும்பத்தைப் பத்தி தான் பேசுறீங்க. எங்களை பத்தி என்னிக்காவது பேசி இருக்கீங்களா?" என கேட்கிறாள். ராதிகா பேசியதைக் கேட்டு கோபி "சரி இனி நம்ம ஜாலியாக இருக்கலாம்" என சொல்லி சத்தியம் செய்கிறார்.


இனியா ப்ரெண்டுடன் போனில் ஜாலியாக பேசிகொண்டு இருக்கிறாள். பாக்கியா வந்ததும் "பிரச்னை வந்தா என்கிட்டே வா ஜாலியா இருக்கணும்னா மட்டும் உங்க அப்பா கூட போ" என கிண்டல் செய்கிறாள். "ஏன் இனியா நம்ம ரெண்டு பெரும் சேர்ந்து ஜாலியாக ரோட் ட்ரிப் போன எப்படி இருக்கும்?" எனக் கேட்கிறாள் பாக்கியா. "நல்லாவே இருக்காது நான் அப்பா கூட ஜாலியா போவேன்" என இனியா சொல்கிறாள். "சரி சந்தோஷமா போய்ட்டு வா " என்கிறாள் பாக்கியா.


 



ஜெனியின் வளைகாப்புக்காக பாக்கியா ஸ்வீட் மற்றும் பலகாரங்களை செய்யத் தொடங்கிவிட்டாள். அவளுக்கு உதவியாக செல்வியும் அமிர்தாவும் இருக்கிறார்கள். ஜெனி ஈஸ்வரியிடம் "வளைகாப்பு முடிந்த உடனே என்னை அனுப்பிடுவீங்களா? நான் ஒவ்வொரு நாளையும் எண்ணி கிட்டே இருப்பேன். சீக்கிரமா வந்து என்னை கூட்டிட்டு போகல நானே கிளம்பி வந்துவிடுவேன்" என சொல்கிறாள் ஜெனி. ஈஸ்வரி "அப்படி எல்லாம் செய்ய கூடாதுமா" என சொல்கிறார். பிறகு ஈஸ்வரி தன்னோட வளைகாப்பு கதையை பற்றி சொல்லி வெட்கப்படுகிறார். அதை கேட்ட அனைவரும் சிரிக்கிறார்கள். 


செழியன் ஜெனியிடம் "இன்னைக்கு ஒரு நாள் தானே என்னோட இருப்ப. கொஞ்ச நேரம் என்னோட டைம் ஸ்பென்ட் பண்ணு"எனப் பாவமாக கேட்கிறான். அப்போது பார்த்து அமிர்தா கூப்பிட "இதோ அமிர்தா கூப்பிடுறாங்க என்னனு கேட்டு வந்துடுறேன்" என சொல்லிவிட்டு செல்கிறாள் ஜெனி. அந்த நேரத்தில் செழியனுக்கு அந்த லேடி கிளைன்ட் போன் செய்து எனக்கு "உங்களை பார்க்கணும் கொஞ்ச நேரம் வந்துட்டு போங்க" என சொல்கிறாள். செழியன் முதலில் முடியாது என சொல்லிவிட்டு பிறகு சரி "நான் வருகிறேன்" என்கிறான். 


 



கீழே அனைவரும் சந்தோஷமாக பேசி சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். பாக்கியா செய்த பலகாரங்களை சாப்பிட்டு அனைவரும் “ரொம்ப சூப்பரா இருக்கு” என்கிறார்கள். ராமமூர்த்தி அவரோட காதல் கதையை பற்றி சொல்கிறார். அனைவரும் சந்தோஷமாக சிரித்துக் கேட்டு கொண்டு இருகிறார்கள். அந்த நேரத்தில் செழியன் அந்த ஜெனியை கூப்பிட, "தாத்தா கதை சொல்கிறார். கேட்டுட்டு வந்துறேன்" என சொல்லிவிட்டு சென்று விடுகிறாள் ஜெனி. கடுப்பான செழியன் அந்த லேடி கிளைன்ட் மெசேஜ் அனுப்ப கிளப்பி சென்று விடுகிறான். 


 



அந்த லேடி செழியனை புகழ்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார். அப்போது செழியன் "நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கல?" எனக் கேட்கிறான். அதற்கு அந்த லேடி கிளையண்ட் தனது கதையை சொல்லி வருத்தப்பட, செழியன் பக்கத்தில் போய் உட்கார்ந்து அவளுக்கு ஆறுதல் சொல்கிறான். அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi ) எபிசோட் முடிவுக்கு வந்தது.