ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி அரிவாளுடன் உட்கார்ந்து கொண்டு சண்முகத்தை என்னை நெருங்கக் கூடாது என சொன்ன நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பதை குறித்து பார்க்கலாம்.
அதாவது, சண்முகம் அப்படியே படுத்து தூங்கி விட்ட நிலையில், பரணி அவன் தூங்கிட்டானா என்று செக் பண்ண கிட்ட நெருங்கி வர, சண்முகம் திடீரென எழுந்து அலற இருவரும் பயந்து விடுகின்றனர்.
பிறகு பரணி “நான் தூங்க போறேன், நீ என்கிட்ட வரக்கூடாது” என்று சொல்லி ரூமுக்கு சென்று விடுகிறாள். ஆனால் அங்கேயும் தூக்கம் வராமல் அரிவாளுடன் உட்கார்ந்து இருக்க, மறுநாள் கோயிலில் இருந்து எல்லோரும் வீட்டுக்கு வர இருவரும் தனித்தனியாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். அதே சமயம் பரணி அரிவாளுடன் இருப்பதைப் பார்த்து சிரிக்கவும் செய்கின்றனர்.
அதைத்தொடர்ந்து வைகுண்டம் “நான் சூடாமணியை பார்க்கணும், என்னை கேரளா கூட்டிட்டு போ” என்று சொல்ல, சண்முகம் அவரை திட்டிக் கொண்டிருக்க வெளியே வரும் பரணி மாமாவை எதுக்குடா திட்டுற என அவனிடம் சண்டை போட, வைகுண்டம் சூடாமணி பற்றிய விஷயத்தை சொல்லிவிடுவார்கள் என சண்முகம் பதறுகிறான்.
வைகுண்டம் உண்மையை சொல்லாமல் மறைத்து விட நிம்மதி அடையும் சண்முகம், அப்பாகிட்ட அவசரப்பட்டு சொல்லிட்டோமோ என யோசிக்கிறான். ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் சண்முகத்தை கொல்ல கேரளா குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வந்திருக்க, அவர்களைப் பார்த்து முத்துப்பாண்டி “இவங்க கல்யாணத்துல என்ன குத்திட்டு ஓடினவன்” என்று அவனை துரத்தி பிடிக்க, ஒரு கட்டத்தில் மனோஜ் என்பவன் மட்டும்
மாட்டிக்கொள்கிறான்.
அவனிடம் சூடாமணி புகைப்படம் இருப்பதைப் பார்த்து சௌந்தரபாண்டி “முத்துப்பாண்டியை அனுப்பிவிட்டு அவனை வீட்டுக்கு அழைத்துச் சென்று உண்மையை சொல்லு” என மிரட்ட “என் அப்பாவை கொன்ன சூடாமணி குடும்பத்தை நான் கொல்லனும் என சொல்கிறான்.
சௌந்தர பாண்டி இவனையே வச்சு சண்முகத்தை போட்டுக்கொள்ள முடிவெடுத்து அவனை ஓரிடத்திற்கு கூட்டி வந்து லைட்டை உடைக்கிறார். “சண்முகம் கண்டிப்பா இப்போ இங்க வருவான்” என அவனைக் கொல்ல காத்திருக்கின்றனர். இப்படியான நிலையில் இந்த வாரம் அண்ணா சீரியல் நிறைவடைகிறது.