அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் கடத்தப்பட்ட புவனாவை அமுதா மீட்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம்பெறுகிறது. 


விறுவிறுப்பாக செல்லும் சீரியல்


தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள  ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இதில் அமுதாவாக கண்மணி மனோகரனும், அன்னலட்சுமியாக ராஜஸ்ரீயும் நடிக்கின்றனர். 






தன் அம்மாவின் கனவுக்காக வாத்தியார் வேலை செய்வதாக சொல்லி, பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் பியூனாக இருக்கும் செந்திலை வாத்தியார் என நினைத்து காதல் கொள்கிறார் அமுதா. அந்தக்காதல் திருமணம் வரை சென்ற நிலையில், செந்திலை பற்றிய உண்மை தெரிய வருகிறது. இதன் பிறகு இந்த சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்பது விறுவிறுப்பாக செல்வதால், ரசிகர்களின் ஃபேவரைட் சீரியலாக அமுதாவும் அன்னலட்சுமியும் உள்ளது. 


முன்னதாக புவனாவை கடத்திய செல்வா தனது மகளை தன்னிடம் ஒப்படைத்தால் தான் அவரைவிடுவிப்பேன் என கூறுகிறார். இதனால் என்ன பண்ண என இக்கட்டான நிலையில் இருக்கும் அமுதாவுக்கு வடிவேல், பரமு, சின்னா கூடி பேசியது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் பேச்சுவார்த்தையின் போது ஒரு கோவிலில் திருமணம் நடக்கவுள்ளதாக பேசியது நியாபகம் வருகிறது. 


அமுதா எடுத்த முடிவு 


இந்நிலையில் இன்றைய எபிசோடில் அமுதாவுக்கு வடிவேலு, செல்வா மகளுடன் திருமணம் செய்து கொள்ளப் போவது தெரிய வருகிறது. இதனால் மாணிக்கத்துடன் சம்பந்தப்பட்ட கோயிலுக்கு வருகிறார். இருவரும் அங்கு வருவதற்கு முன்னால் வடிவேலு செல்வா மகளின் கழுத்தில் தாலி கட்டி விடுகிறார். இதனையடுத்து அமுதாவுக்கும் வடிவேலுவுக்கும் சண்டை நிகழ்கிறது. 


அப்போது புவனாவை செல்வா பிடித்து வைத்திருக்கும் விஷயத்தை அமுதா சொல்கிறாள்‌. மேலும்  இந்த பெண்ணை கொண்டு போய் விட்டால் தான் புவனாவை காப்பாத்த முடியும் என சொல்ல, வடிவேலு அனுப்ப முடியாது என பிடிவாதமாக மறுக்கிறார்.  இதனை தொடர்ந்து ஒருவழியாக வடிவேலுவிடம் போராடி அமுதா அப்பெண்ணை இழுத்து ஆட்டோவில் அழைத்து செல்கின்றனர். 


மறுபக்கம் குமரேசன், பழனி இருவருக்கும் வடிவேல் தாலி கட்டிய விவரம் தெரிய வர, அவர்கள் சிதம்பரத்துக்கு போன் செய்து விஷயத்தை சொல்கிறார்கள். இதனால் உங்களுக்கு தான் பிரச்சனை என சிதம்பரத்தை பயமுறுத்தியதால் அவர் உடனடியாக செல்வாவை சந்திக்கிறார். அங்கு தனக்கும் அந்த குடும்பத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என சொல்கிறார்.


மீட்கப்பட்ட புவனா 


அப்போது அமுதா அப்பெண்ணை அழைத்து வருகிறார். மேலும் வடிவேலு ஒரு தப்பான ஆளு, நீ உங்க அப்பா கூட இருக்குறது தான் நல்லது என அப்பெண்ணுக்கு அமுதா அறிவுரை சொல்கிறார். உடனே சிதம்பரம் அமுதாவிடம் அந்த பெண்ணுக்கு ஊர் நியாயம் எல்லாம் சொல்ற, அது உனக்கு எவ்வளவு முக்கியம்னு தெரியாதா என கேட்கிறார். ஆனால் அமுதா எதுவும் பேசாமல் இருக்கிறார். 


இதனையடுத்து அமுதா செல்வாவிடம் நான் சொன்னபடி உங்க பெண்ணை கொண்டு வந்து ஒப்படைச்சிட்டேன். புவனாவை விடுங்க என சொல்ல, புவனாவை அமுதா அழைத்து செல்கிறார். இதன்பின்னர் சிதம்பரத்திடம் செல்வா அமுதாவை பற்றி பெருமையாக பேசுகிறார்.


இதற்கிடையில் காலேஜிலிருந்து வீடு திரும்பும் செந்தில் அமுதாவிடமும் அன்னலட்சுமியிடமும் இவ்வளவு நடந்திருக்கு என் கிட்ட சொல்லனும்னு உங்களுக்கு தோணலையா என கோபம் கொள்ள அமுதா நடந்தவற்றை சொல்லும் காட்சிகள் இடம் பெறுகிறது.