ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.


இந்த சீரியலில் முந்தைய எபிசோட்டில் அமுதாவின் காதல் கணவனை காப்பாற்ற வேண்டும் என்ற போராட்டத்தைப் பார்த்து டாக்டர் செந்திலுக்கு சிகிச்சை அளிக்க முடிவெடுத்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.


டாக்டர் ஆபரேசன் தியேட்டரை ரெடி பண்ண சொல்ல, அமுதா அன்னலட்சுமிக்கு போன் செய்து விஷயத்தை சொல்கிறாள். பிறகு செந்திலுக்கு ஆபரேஷன் முடிய நர்ஸ் ஒருவர் உமாவுக்கு போன் செய்து “ஆபரேஷன் முடிஞ்சு போச்சு, என்னால ஒண்ணும் பண்ண முடியாது, டாக்டர் 4 மணி நேரம் கழித்து கண் கட்டை ஓபன் பண்ண சொல்லிருக்காரு, அப்ப கண் வெளிச்சம் படாம பார்த்துக்க சொல்லிருக்காரு” என சொல்கிறாள்.


உடனே உமா வேறொரு திட்டம் போட்டு நர்சிடம் போட்டோ எடுக்கும் ப்ளாஷ் லட்டை கண் திறக்கும் போது அடிக்க சொல்கிறாள். அடுத்ததாக டாக்டர் செந்தில் கண் கட்டை அவிழ்க்க, நர்ஸ் ப்ளாஷ் லைட்டை அடிக்கப் போக, மாயா அதைப் பார்த்து விட்டு நர்சிடம் இருந்து ப்ளாஷ் லைட்டை வாங்கி அவளைத் திட்டுகிறாள்.


செந்தில் டாக்டரிடம் அமுதாவை தான் முதலில் பார்க்க வேண்டும் என்று சொல்லி கண் திறந்து அமுதாவை பார்க்க, செந்திலுக்கும் மீண்டும் கண் தெரிய வருகிறது.


அமுதா மாணிக்கத்திற்கு போன் செய்து செந்திலுக்கு கண் பார்வை சரியாகி விட்டதை சொல்ல, பழனி உமாவிடம் கோபத்துடன் தண்ணீரை எடுத்து மேலே ஊற்ற சொல்கிறான். குமரேசன் “அவசரப்பட்டு எதுவும் செய்யக் கூடாது, நமக்கு சந்தர்ப்பம் வரும் போது அந்த குடும்பத்தை வேரறுப்போம்” என சொல்கிறார்.


இங்கே மாயா வீட்டிற்கு உமா வர, உமா அவளிடம் “யார் நீ, உனக்கும் அந்த குடும்பத்துக்கும் என்ன சம்மந்தம்? ஒழுங்கா உண்மையை சொல்லு..” என மிரட்டுகிறாள்.


உமா மாயாவிடம் “நீ பெரிய கோடீஸ்வரின்னு எனக்கு தெரியும், எதுக்கு நீ செந்திலுக்கு உதவி பண்ற , என்ன சம்மந்தம்னு மரியாதையா சொல்லு” எனக் கேட்க, மாயா அமைதியாகவே இருக்கிறாள். “நீ என் கிட்ட உண்மையை சொல்லலேன்னா நான் அந்த வீட்டுல போய் நீ யாருன்னு உண்மையை சொல்லவா” என சொல்லிவிட்டு நகர, மாயா உமாவை கூப்பிடுகிறாள்.


பிறகு மாயா உமாவிடம் தாலி செயினை எடுத்துக் காட்டுகிறாள். இப்படியான நிலையில் இன்றைய அமுதாவும் அன்னலட்சுமியும் எபிசோட் நிறைவடைகிறது.