ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் 'அமுதாவும் அன்னலட்சுமியும்'. 


நேற்றைய எபிசோடில் அமுதா தேர்வு எழுதிய பேப்பர் கோர்ட்டில் மீண்டும் திருத்தப்பட்ட நிலையில் அமுதா பாஸ் எனத் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் அமுதா தான் பாஸ் ஆனதைக் கூறி கதிரேசன் போட்டோ முன் நின்று ஆசிர்வாதம் பண்ண சொல்கிறாள். 


அடுத்ததாக செந்தில் அமுதாவிடம் “மத்தவங்க உன்னை இளக்காரமா நினைச்ச மாதிரி நானும் உன்னை நினைச்சிட்டேன், என்னை மன்னிச்சிரு” என சொல்ல, அமுதா “அவனிடம் நீங்க படிக்கும் போது நான் உங்களை நம்புன மாதிரி, நீங்க என்னை நம்பலேல்ல..” என சொல்ல, “இனிமே நான் எப்பவுமே உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்” என சொல்கிறான். 




அதற்கு அமுதா அவனிடம் “முதல் தடவை விழுந்து எழும்போது தான் பயமா இருக்கும், யாராவது கை குடுக்க மாட்டாங்களான்னு தோணும், ரெண்டு மூணு தடவை விழுந்து எழுந்தா யாரோட உதவியும் தேவைப்படாது” என சொல்லிவிட்டு நகர்கிறாள்.  செந்தில், “கோயிலுக்குச் சென்று பிள்ளையாரிடம் என் பொண்டாட்டியை புரிஞ்சுக்காம அவ ஆசைக்கு எதிரா நின்னது தப்பு தான், எனக்கே என்னை நினைச்சா அசிங்கமா இருக்கு” என வருந்துகிறான். 


அடுத்ததாக சிதம்பரம், செல்வா செந்தில் வீட்டுக்கு வர, வடிவேலு சிதம்பரத்தை பார்த்தவுடன் வீட்டை விட்டு வெளியே போகச் சொல்ல, பின்னால் செல்வா வர, அவரைப் பார்த்ததும் “வாங்க மாமா” என சொல்லி பம்முகிறான்.


அடுத்ததாக சிதம்பரம் அமுதாவை ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போக சொன்னதாக சொல்ல, பரமு அவரை நக்கல் செய்ய, அமுதா ஸ்கூல் யூனிபார்ம் அணிந்து வர, அன்னம் “யூனிபார்மை கழட்டி போட்டுட்டு வீட்டு வேலை பார்க்குற வழியை பாரு” என சத்தம் போடுகிறாள். 


பின்னர் சிதம்பரம், “உங்க பையன் கல்யாணம் பண்ண பிறகு காலேஜுக்கு போய் படிச்சாரு, அப்ப உங்க குடும்ப மானம் போகலையா?” எனக் கேட்க, “என் மக தன்னையே வருத்தி உங்க குடும்ப கவுரத்தை மீட்டு குடுத்துருக்கா, அவ படிக்கனும்னு சொல்லும் போது ஏன் தடுக்குறீங்க?” எனக் கேள்வி கேட்கிறார். உடனே செல்வா அன்னத்திடம் “பொம்பளை படிக்கக் கூடாதா, அவ வீட்டுக்கள்ளேயே முடங்கி கிடக்கனுமா” எனக் கேள்வி கேட்க அன்னம் சிதம்பரத்திடம், “இப்ப என்ன உங்க மக படிக்கணும்... அம்புட்டு தான?” என சர்க்கரையை எடுத்து சாப்பிட்டு விட்டு போகச் சொல்கிறாள். 




பிறகு அமுதா கிளம்ப, “அன்னம் நீங்க உங்க மக படிக்கனும்னு நினைக்கிறிங்க அதுல நான் தலையிட மாட்டேன், ஆனா இப்ப இவன் என் மருமக, இவ படிக்கிறதுல எனக்கு விருப்பம் இல்ல, என் மகனை அத்துவிட்டுட்டு உங்க மகளை கூட்டிட்டு போய் படிக்க வைங்க“ என சொல்ல சிதம்பரம், செல்வா ஷாக் ஆகின்றனர். 


சிதம்பரம் கோபத்துடன் அன்னத்தை பார்த்து கை ஓங்க, அன்னம் கோபத்துடன் “நல்லா அடிங்க அடிங்க” எனக் கத்த அமுதா சிதம்பரத்தை கிளம்பச் சொல்கிறாள். 


“அன்னம் அமுதாவிடம் நீயும் உன் அப்புச்சியும் சேர்ந்து நாடகமா போடுறீங்க” என கோபத்துடன் அமுதாவை வெளியே பிடித்து தள்ளி சிதம்பரத்திடம் “உங்க பொண்ணை கூட்டிட்டு போங்க” என சொல்ல, செல்வா அமுதாவை காரில் ஏறச் சொல்கிறார்.  இப்படியான பரபரப்பான சூழலில் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.