ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும்.
இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் செந்திலை காப்பாற்றிய மாயாவை பாம்பு கடித்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
வைத்தியர் வந்து மாயாவுக்கு மருந்து குடுத்து “இன்னும் பத்து நிமிஷத்துல கண்ணு முழிச்சிருவாங்க” என சொல்லிவிட்டு போக, மாணிக்கம் “இவ எப்படி இங்க வந்தா என கேக்க, அன்னலட்சுமி கடவுளா பார்த்து என் மகனை காப்பாத்த அனுப்பி வச்சிருக்கா” என நெகிழ்கிறாள்.
அடுத்து கண் முழிக்கும் மாயா, அமுதாவிடம் “மறக்காம சாரை திங்கள்கிழமை கூட்டிட்டு வந்துருங்க” என சொல்ல, அமுதா தானும் கூட வருவதாக சொல்லி செல்கிறாள். மாயா வீட்டுக்கு வர,வீட்டில் யாரும் இல்லாததை பார்த்து “வீட்டுல வேற யாரும் இல்லையா” எனக் கேட்க, மாயா தான் ஒரு அனாதை, தனக்கு ரொம்ப பிடிச்ச குடும்பம்னா அது உங்க குடும்பம் தான், அதுக்காக தான் நீங்க கஷ்டப்படக் கூடாதுன்னு தான் பணம் தர்றேன்னு சொன்னேன் என்று சொல்ல திரும்பவும் அமுதா வேண்டாம் என சொல்லிவிட்டு நகர்கிறாள்.
அடுத்ததாக மாயாவுக்கு போன் வர, மாயா வீட்டின் பின்புறம் வந்து பாம்பாட்டியிடம் இந்த விஷயத்தை எங்கயும் கசிய விட்டுரக் கூடாது என சொல்லி பணம் கொடுக்கிறாள். அமுதா செந்திலிடம் மாயா பணம் தந்து உதவுதாக சொன்னதை சொல்லி, தான் வேண்டாம் என மறுத்துவிட்டதாக சொல்ல, செந்தில் வாங்கி இருக்கலாமே என கேக்க, தெரியாதவங்க பணம் குடுத்தா அதுல ஏதோ ஒரு விஷயம் இருக்கும் என சொல்கிறாள்.
இதையடுத்து ரிஜிஸ்டர் ஆபிஸ் முன் ஹவுஸ் ஓனர், பழனி, உமா வந்திருக்க பழனி அவரிடம் “நீங்க குடுத்த ரெண்டு நாள் டைம் முடிஞ்சு போச்சு, இவ்வளவு நேரம் ஆகியும் அமுதா வரலை. அதனால வீட்டை என் பேருக்கே முடிச்சிருங்க” என்று சொல்கிறான். ரிஜிஸ்டர் ஆபிசில் கையெழுத்து போடப் போகும் சமயம் அமுதா கையில் பணத்துடன் வருகிறாள். அதை ஹவுஸ் ஓனரிடம் குடுக்க, அவர் ரிஜிஸ்டரிடம் அமுதா பேருக்கு பத்திரத்தை முடிச்சிரலாம் என சொல்லி கையெழுத்து போட்டு அமுதாவிடம் கொடுக்க அவள் சந்தோஷப்படுகிறாள்.
அதனைத் தொடர்ந்து அமுதா வீட்டுக்கு வந்து பத்திரத்தை நீட்ட அனைவரும் சந்தோஷமாகின்றனர். அமுதா மாயாவுக்கு நன்றி சொல்வது, நீங்க இனிமே அனாதை இல்ல எங்க குடும்பத்துல ஒருத்தர் என சொல்ல மாயா மனதிற்குள் அதுக்காக தான் நான் இவ்வளவு கஷ்டப்பட்டு பணத்தை வாங்க வச்சேன் என நினைத்துக் கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.