Kizhakku Vaasal Aug 31: தயாளனுக்கு எதிராக ரேணு எடுத்த சபதம்.. கிழக்கு வாசல் சீரியலில் இன்று..!

Kizhakku Vaasal Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கிழக்கு வாசல்’ சீரியலில் இன்றைக்கு ஒளிபரப்பாகவுள்ள காட்சிகள் பற்றி காணலாம்.

Continues below advertisement

Kizhakku Vaasal serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கிழக்கு வாசல்’ சீரியலில் இன்றைக்கு  (ஆக. 31) ஒளிபரப்பாகவுள்ள காட்சிகள் பற்றி காணலாம்.

Continues below advertisement

கிழக்கு வாசல் சீரியல் 

தனது ராடன் மீடியா நிறுவனத்தின் மூலம் நடிகை ராதிகா  விஜய் டிவியில் ‘கிழக்கு வாசல்’ சீரியலை தயாரித்துள்ளார். இந்த சீரியல் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இயக்குநர் எஸ் .ஏ.சந்திரசேகர், நடிகைகள் ரேஷ்மா முரளிதரன்,தாரிணி, நடிகர்கள் ஆனந்தபாபு, வெங்கட் ரங்கநாதன், அருண் குமார் ராஜன், ரோஜா ஸ்ரீ, கிரண் மாயி, அஸ்வினி ராதா கிருஷ்ணா, கீதா நாராயணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த சீரியல் தினமும் இரவு 10 மணிக்கு விறுவிறுப்பாக  ஒளிபரப்பாகி வருகிறது. 

இன்றைய எபிசோட் அப்டேட் 

 ரேணு வீட்டை விட்டு காணாமல் போன நிலையில், அவள் கடற்கரையில் தனியாக அமர்ந்திருப்பதை சாமியப்பனும் ஷண்முகமும் பார்க்கிறார்கள். ரேணு தன்னுடைய வாழ்க்கையை நினைத்து புலம்ப, இருவரும் சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து செல்கின்றனர். இதனைத் தொடர்ந்து மலர் ரேணுவிடம், காணாமல் போனதால் வீட்டில் இருப்பவர்கள் பயப்பட்டார்கள் என நடந்ததை சொல்ல, நான் இன்றைக்கு தைரியமாக இருக்க காரணமே தயாளன் மாமா தான் என சொல்கிறாள். பிளாஸ்பேக் காட்சிகள் செல்கிறது. 

ரேணு கடற்கரையில் இருந்த போது அங்கு நடைபயிற்சி வரும் தயாளன், சாகப்போறியா என கேட்டு அதிர்ச்சியடைய வைக்கிறார். “உனக்கு ஒரு டிகிரி கிடைச்சதே பெருசு, மேற்கொண்டு படிக்கணுமா? உன்னால் தான் ஏகப்பட்ட பிரச்சினை என்னோட அக்கா சிவகாமி வீட்டுல” என சொல்லி கொந்தளிக்கிறார். “உனக்கு ஷண்முகம், சாமியப்பன் சப்போர்ட் பண்றாங்கல. பேசாமல் கடலில் விழுந்து தற்கொலை செய்” என சொல்ல, இதைக் கேட்டு ரேணு டென்ஷனாகிறாள். “என்னோட ஸ்டேட்ட்ஸ், பணம் எல்லாம் உனக்கு தெரியுமா?.. தெரிய போய் தானே மருமகளை வர ஆசைப்படுற?” எனக் கேட்கிறார் 

 பதிலுக்கு “என் அப்பா மாதிரி ஒரு ஆளை பார்த்துவிட்டு உன்னோட வீட்டில் வந்து வாழ வருவனா? இப்ப சொல்றேன் நான் படிக்கப் போறேன். என்ன தெரியுமா? .. வழக்கறிஞர் படிப்பு படிக்க போறேன்” என சொல்லி தயாளனுக்கு அதிர்ச்சி கொடுக்கிறாள். இதனைக் கேட்டு தயாளன் அதிர்ச்சியடைகிறார். இந்தக் கதையெல்லாம் கேட்டு மலர் ஆச்சரியப்படுகிறாள். அப்போது ஷண்முகம் வர, அவனிடம் நடந்தை சொல்கிறாள். 

இதனையடுத்து ரேணு, மலரை விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி சாதிக்க வேண்டும் என சொல்கிறார். ஷண்முகத்திடம் அவனின் பாடும் திறமையை மெருகேற்றுமாறு தெரிவிக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

Continues below advertisement