Sandakozhi: 'செம ட்ரீட் இருக்கும்போல’ - ரியா விஸ்வநாதன் நடிக்கும் சண்டக்கோழி சீரியல் ப்ரோமோ வைரல்..!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள சண்டைக்கோழி சீரியலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

Continues below advertisement

ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள சண்டக்கோழி சீரியலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

Continues below advertisement

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அடுத்தடுத்து பல புதுவித சீரியல்கள் ஒளிபரப்பாகவுள்ளது. ஏற்கனவே பல சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், புதிய சீரியல்களும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் அடுத்ததாக “சண்டக்கோழி” என்ற சீரியல் ஒளிபரப்பாகவுள்ளது. 

இந்த சீரியலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் அறிமுகமான  ரியா விஸ்வநாதன் கதையின் நாயகியாக நடிக்கிறார். முன்னதாக இவர் கடந்த பிப்ரவரி மாதம் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். நடிகை ஆல்யா மானஸாவுக்கு பதில் இந்த சீரியலில் கமிட்டான அவர், ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இப்படியான நிலையில், ரியா விஸ்வநாத் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு தனது வெளியேற்றத்தை அறிவித்தார்.

ஜீ தமிழில் எண்ட்ரீ 

இதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள சண்டக்கோழி சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக அந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் ரியாவுக்கு ஜோடியாக புதுப்புது அர்த்தங்கள் சீரியல் புகழ் நியாஸ் நடிக்க உள்ளார். 

அந்த வீடியோவில் பணக்கார குடும்பத்தை சேர்ந்த ஆக்ரோஷமான பையன் விக்ரம் ( நியாஸ் ) நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஜாலியான பொண்ணு மகா ( ரியா ) ஆகியோரின் முதல் சந்திப்பே மோதலில் தொடங்குகிறது. அடுத்த ஷாட்டில் இருவரும் மணக்கோலத்தில் உட்கார்ந்திருக்கின்றனர். 

சண்டைக்கோழிகளாக இருந்த இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்தது எப்படி? இனி இவர்கள் வாழ்க்கையில் நடக்க போவது என்ன என்பது தான் இந்த சீரியலின் கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சீரியல் வரும் மே 8 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சீரியல் ஒளிபரப்பு நேரம் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola