தனியார் தொலைக்காட்சியில் பிரபலமான தொடராகவும், பல ஆயிரம் ரசிகர்களையும் கொண்டுள்ள தொடர் பாக்கியலஷ்மி. இதில், பாக்கியலஷ்மி கதாப்பாத்திரத்தை விட மிகவும் பிரபலமான கதாப்பாத்திரமாக இருப்பது, கோபி என்கிற கேரக்டர்தான். இந்த கேரக்டரில், நடிகர் சதீஷ் குமார் நடித்துவந்தார். இவர் பாக்கியலக்ஷ்மி தொடரில் இருந்து விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மூலம் அறிவித்துள்ளார். 


திடீர் விலகல்!


தொடரின் ஆரம்பத்தில் சக மனிதனாக காண்பிக்கப்பட்ட கோபி, இப்போது வேறொரு திருமணத்தை செய்து கொண்டு பல பெண்களுக்கு பிடிக்காத கதாப்பாத்திரமாக மாறியுள்ளார். சில நாட்களுக்கு முன்னரே வேறொரு கதாப்பாத்திரம் வருவதால் தனக்கான காட்சிகள் குறையும் என அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ பதிவினை வெளியிட்டிருந்தார். இன்றும் அதே போல ஒரு வீடியோ பதிவின் மூலம், தான் பாக்கியலஷ்மி தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். 




“காரணங்கள் பல இருக்கு..”


பாக்கியலஷ்மி தொடரிலிருந்து சதீஷ் விலகுவதாக ஏற்கனவே செய்திகள் பரவத்தொடங்கின. அதையெல்லாம் உறுதிப்படுத்தும் வகையில், நடிகர் சதீஷ் இன்று ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் அவர் பேசியுள்ளதாவது. 


“வணக்கம்..இதை செய்வதற்கு கடினமாக இருந்தாலும் இதை செய்துதான் தீர வேண்டும். கோபி கதாப்பாத்திரத்தில் பாக்கியலஷ்மி தொடரில் நடித்து வந்த சதீஷ் குமார் எனும் நான் இன்னும்  10-15 எபிசோடில் பாக்கியலக்ஷமி சீரியலில் இருந்து நான் விலகுகிறேன்..அதில் எந்த மாற்றமும் இல்லை. காரணங்கள் பல இருக்கு..நிறைய தனிப்பட்ட காரணங்களும் இருக்கின்றன. இந்த கோபி கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் எல்லோரும் பாராட்டும் வகையில் இதுவரை நடித்துக் கொடுத்திருக்கிறேன். என் மீது அன்பு காட்டிய அனைவருக்கும் நன்றி” என நடிகர் சதீஷ் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். 


இதுதான் காரணமா!


நடிகர் சதீஷ் இதற்கு முன்னதாக வெளியிட்டிருந்த வீடியோவில் புதிதாக ஒரு ஹீரோ வருவதால் தனக்கான ஸ்க்ரீன் டைம் குறைய வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருந்தார்.  மேலும், ஹீரோவாக புது எண்ட்ரி கொடுத்துள்ள ரஞ்சித்திற்கு ஆதரவு அளிக்குமாறும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, அப்போதே அவர் சீரியலில் இருந்து விலகுவார் என ரசிகர்களின் வட்டாரங்களில் பேசப்பட்டது. இப்போது, அவரது விலகல் செய்தி கேட்டவுடன் புது எண்ட்ரியின் வருகைதான் இவர் விலகுவதற்கு காரணமாக இருக்குமோ என பலர் சந்தேகமடைந்துள்ளனர். 




ரசிகர்கள் வருத்தம்:


ஒரு பெண்ணின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் பாக்கியலஷ்மி தொடரை, பலர் தொடர்ந்து பார்த்து வருகின்றனர். குறிப்பாக பள்ளி குழந்தைகள் முதல் வேலைக்கு செல்லும் இளைஞர்-இளைஞிகள் வரை பலர் இந்த சீரியலுக்கு ரசிகர்களாக உள்ளனர். அவர்களுக்கு கோபியின் இந்த விலகல் செய்தி மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. ஒரு சில ரசிகர்கள், தங்களுக்கு இந்த செய்தி மிகுந்த மனவருத்தத்தை தருவதாக தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர், “கோபிதான் பாக்கியலஷ்மி சீரியலுக்கு பலம் என்றும் அவர் இல்லையென்றால் இத்தொடர் கண்டிப்பாக மண்ணை கவ்வும்” என்றும் தெரிவித்து வருகின்றனர். 


Also Read|Meenakshi Ponnunga: மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகை.. திடீர்னு என்ன ஆச்சு?