விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி 2 சீரியல் திடீரென முடிவுக்கு வந்ததால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். 


ராஜா ராணி சீசன் 2:


சீரியல்கள் எப்போதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் ஆல்டைம் பேவரைட் ஆக உள்ளது. இதனால் விதவிதமாக சீரியல்களை முன்னணி சேனல்கள் அனைத்தும் ஒளிபரப்பி வருகின்றது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  ராஜா ராணி 2 ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல்களில் முக்கியமானதாக இருந்து வந்தது. 


ராஜா ராணி சீரியலின் முதல் பாகத்தில் சஞ்சீவ் ஹீரோவாகவும், ஆல்யா மானசா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். இந்த சீரியலின் வெற்றி இரண்டாவது பாகம் உருவாக வழிவகுத்தது. தொடர்ந்து இரண்டாம் பாகத்தில் சஞ்சீவுக்கு பதிலாக விஜே சித்து ஹீரோவானார். ஆனால் ஹீரோயினாக ஆல்யாவே தொடர்ந்த நிலையில், அவர் 2வது கர்ப்பமானதால் சீரியலில் இருந்து விலகினார். 


கிண்டலும், கேலியும் செய்த ரசிகர்கள்:


மேலும் அவருக்கு பதில் ரியா விஸ்வநாத் சந்தியா கேரக்டரில் தொடர்வார் என ஆல்யா மானசா தெரிவித்திருந்தார். இந்த சீரியலின் கதைப்படி வருஷம் 365 நாளும் பிரச்சினை என்ற ரீதியில் நாளும் புது புது பிரச்சினை சந்தியாவுக்கு வரும், அவர் எல்லாவித சவால்களையும் எப்படி சமாளிக்கிறார் என்பதை காட்டி வந்தார்கள். இந்த சீரியல் இணையத்தில் கடும் கிண்டல், கேலிக்குள்ளானது. 






இதனிடையே முதலில் பிரவீன் பென்னட் இயக்கி வந்த சீரியலில் இருந்து அவர் விலக,  ரமேஷ் பாரதி என்பவர் இயக்குநரானார். தொடர்ந்து விஜே அர்ச்சனா, ரியா விஸ்வநாத் விலகினார். இதில் ரியா நடித்து வந்த அர்ச்சனா கேரக்டரில் ஜீ தமிழ் சேனலில் கோகுலத்தில் சீதை சீரியலில் நடித்து வந்த ஆஷா கவுடா நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இப்படி பல மாற்றங்களுடன் கடந்த இரண்டு மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியல் முடிவுக்கு வந்துள்ளது. 


இதனைத் தொடர்ந்து சீரியல் குழுவினர் மக்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதனால் ராஜா ராணி சீரியல் ரசிகர்கல் சோகமடைந்துள்ளனர்.