சின்னத்திரை ரசிகர்களை முழுமையாக ஆக்ரமித்ததில் பெரும் பங்கு சீரியல்களையே சேரும். ஒவ்வொரு தொலைக்காட்சியும் பல கதைக்களம் கொண்ட சீரியல்களை அடுத்தடுத்து ஒளிபரப்பி வருகிறார்கள். ஒரே நேரத்தில் பல சீரியல்களை கூட பார்க்க கூடிய அளவுக்கு சீரியல் ரசிகர்கள் கூட உள்ளனர் என்பது தான் சின்னத்திரைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.


ஒவ்வொரு டிவியிலும் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எந்த அளவுக்கு ரசிகர்ளை கவர்ந்துள்ளன என்பது டி.ஆர்.பி ரேட்டிங் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. பெரும்பாலும் சீரியல்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் விளம்பரம் பெரும் பங்கு வகிக்கிறது. பிரபலமான நடிகர்கள், ப்ரோமோ, ஒளிபரப்பாகும் நேரம் இப்படி பல விஷயங்களின் அடிப்படையில் சீரியல்கள் முன்னிலை வகிக்க காரணங்களாக அமைகின்றன.  அந்த வகையில் கடந்த வாரத்திற்கான டி.ஆர்.பி ரேட்டிங் பட்டியல் வெளியாகியுள்ளது. 


 



ஒவ்வொரு வாரமும் முன்னணி இடத்திலேயே தொடர்ச்சியாக இருந்து வருகிறது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியல். 10.15 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. 9.68 புள்ளிகளுடன் கயல் சீரியல் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தை எதிர்நீச்சல் சீரியல் 8.74 தக்கவைத்துள்ளது. 


மூன்றாவது இடத்தில் இருந்த சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘வானத்தைப் போல’ சீரியல் 8.09 புள்ளிகளுடன் இந்த வாரம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ஆறாவது இடத்தில் இருந்த விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் 7.91 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறிவிட்டது. கடந்த வாரம் ஐந்தாவது இடத்தில் இருந்த இனியா சீரியல், இந்த வாரம் ஆறாவது இடத்தில் 7.80 புள்ளிகளும், 7.72 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் சுந்தரி சீரியலும் இடப்பெற்றுள்ளது. 




விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் 6.91 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும், 5.86 புள்ளிகளுடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் : தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ சீரியல் ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளது. பல வாரங்களுக்கு பிறகு முதல் 10 இடத்துக்குள் நுழைந்துள்ளது ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபலமான தொடரான 'கார்த்திகை தீபம்' சீரியல். 


டி.ஆர்.பி ரேட்டிங் வரிசையில் பெரும்பாலும் சன் டிவி, விஜய் இடையே போட்டி நிலவி வந்தாலும் இவர்கள் இருவருடன் கடுமையாக போட்டி போட்டு முன்னேற முயல்கிறது ஜீ தமிழ் தொலைக்காட்சி.  தற்போது இந்த டி.ஆர்.பி ரேட்டிங் நிலவரம் இந்த வாரத்திற்கானது மட்டுமே. வரும் வாரங்களில் இதில் மாற்றம் நிகழவும் வாய்ப்புகள் உள்ளன.