தொலைக்காட்சி சேனல்களில் குடும்பத்துடன் திரைப்படங்கள் பார்ப்பது அல்லது ஓய்வில் இருப்பவர்கள் சேனல்களில் வரும் திரைப்படங்களை மகிழ்ச்சியுடன் கண்டுகளிப்பார்கள். 


கலர்ஸ் தமிழ் சேனலில் இந்த வார சிறப்பு காமெடி படங்கள்


வயாகாம்18 இன் தமிழ் பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் சேனல் இந்த வாரத்தை காமெடி வாரமாக கொண்டாடுகிறது. திங்கள் முதல் வியாழன் வரை நகைச்சுவைப் படங்கள் ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது. இந்த படங்கள் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


அந்த வகையில், இன்று திங்கட்கிழமை (17ஆம் தேதி) வைகை புயல் வடிவேலு நடித்த திரைப்படமான ‘எலி’ ஒளிப்பரப்பாகிறது. 


நாளை (செவ்வாய், 18 ஆம் தேதி) கவுண்டமணியின் ‘எனக்கு வேறு கிளைகள் எதுவும் இல்லை’, புதன்கிழமை (19 ஆம் தேதி) சரண்யா பொன்வண்ணன் , கோவை சரளா மற்றும் கல்பனா நடித்த இன்பா ட்விங்கிள் லில்லி மற்றும் வியாழன் (20ஆம் தேதி) சந்தானம் நடித்த ’சபாபதி’ ஒளிபரப்புகிறது. 


எலி


எலி - 2015 ஆம் ஆண்டு யுவராஜ் தயாளன் எழுதி இயக்கிய Spy-Comedy திரைப்படமாகும். இப்படத்தில் எலிசாமி "எலி"/ஜாலியாக வடிவேலு மற்றும் சதா நடித்துள்ளனர். இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். 1960- களின் பின்னணியில் எடுக்கப்பட்ட எலி, சட்டவிரோத சிகரெட் கடத்தல் திட்டத்தை முறியடிக்கும் முயற்சியில் ஒரு கும்பலை ஊடுருவ காவல்துறையினரால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஒரு சிறிய நேர திருடன் மீது கவனம் செலுத்துகிறது. இந்தப் படம் இன்று இரவு 9:30 மணிக்கு கலர்ஸ் தமிழில்..


எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது


’எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’  2016 ஆவது ஆண்டில் வெளியான சூப்பர் காமெடி திரைப்படமாகும். கணபதி பாலமுருகன் எழுதி இயக்கிய இத்திரைப்படத்தில் கதா நாயகன் கவுண்டமணி (கேரவன் கிருசுணன்), சௌந்தரராஜா, ரித்விகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தன. அருணகிரி இசையமைத்திருந்ததார்.


இன்பா டிவிங்கிள் லில்லி


’இன்பா டிவிங்கிள் லில்லி’, R.K.வித்யாதரன் எழுதி இயக்கிய 2018 ஆம் ஆண்டு வெளியான Heist-Comedy திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சரண்யா பொன்வண்ணன் , கோவை சரளா மற்றும் கல்பனா ஆகிய மூன்று பெண் கதாபாத்திரங்களில் (பாட்டியாக) நடித்துள்ளனர் . மனோபாலா , சித்ரா , அகான் லட்சுமணன் , அஷ்மிதா, இமான் அண்ணாச்சி , தேவதர்ஷினி ஆகியோர் இந்தப் படத்தில் துணை வேடங்களில் நடித்துள்ளனர். ‘இட்லி’ பார்க்க வரும் புதன்கிழமை பாருங்கள்.


சபாபதி


இயக்குநர் ஆர்.சீனிவாச ராவ் இயக்கத்தில் வெளிவந்த, சபாபதி (சந்தானம்) பேச்சு ஒழுங்கின்மை பிரச்சனையால் பாதிக்கப்படும் ஒரு Comedy கதை. தனது இந்த பிரச்சனையால், பிறரால் அவமதிக்கப்படுவது, கேலிக்குள்ளாவது என அவர் நிறைய சவால்களை சந்திக்கிறார். எம்.எஸ். பாஸ்கர் மற்றும் ப்ரீத்தி வர்மா இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  தனது இயலாமையை எதிர்த்து வெல்வாரா? தனது தந்தையிடம் தன்னை நிரூபித்துக் காட்டுவாரா? தனது காதலில் வெற்றியடைவாரா?  என்பதை காண சபாபதி திரைப்படத்தை பார்த்து என்ஜாய்.


இந்த வாரம் முழுவதும் காமெடி படங்கள் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள், கல்ர்ஸ் டிவி-யை டியூன் இன் செய்யுங்க. 




மேலும் வாசிக்க..


Jailer Second Single: 'தல முதல் அடி வரை தலைவரு அலப்பறை’ : தெறிக்கவிடும் ஜெயிலர் பாடல்.. மாஸ் காட்டும் ரஜினிகாந்த்..!


Hukum Song Lyrics: 'உன் அலும்ப பார்த்தவன், உங்க அப்பன் விசில கேட்டவன்...' முழு டைகர்கா ஹுக்கும் லிரிக்ஸ் இதோ உங்களுக்காக!