நைட் 11 மணிக்கு மேல் படம் பார்க்க கூடாது...தெலங்கானா நீதிமன்றம் அதிரதி உத்தரவு

16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் காலை 11 மணிக்கு முதல் மற்றும் இரவு 11 மணிக்குப் பின் திரையரங்கில் அனுமதிக்கப்பட கூடாது என தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Continues below advertisement

புஷ்பா 2

அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியின் போது ஏற்பட்ட விபத்து தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறப்பு காட்சிக்கும் குடும்பத்துடன் படம் பார்க்க வந்த ரேவதி என்கிற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததுடன் அவரது மகன் சாய் தேஜ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். ஒது திரைப்படங்களின் சிறப்பு காட்சிகளில் நிறைய கட்டுபாடுகளை விதிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தெலங்கானா உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 

Continues below advertisement

திரையரங்கில் புதிய கட்டுப்பாடுகள்

திரையரங்கில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கோரியும் அதிகரித்து வரும் டிக்கெட் விலை குறித்தும் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த இன்று விஜய்சென் ரெட்டி முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவில்  குழந்தைகள் அதிகாலை மற்றும் நள்ளிரவு திரையரங்கிற்கு செல்வது பாதுகாப்பற்றது என்றும் இது உடல்ரீதியாகவும் மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என  குறிப்பிடப் பட்டிருந்ததை சரி என்று கூறினார் நீதிபதி. 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் காலை 11 மணிக்கு முதல் மற்றும் இரவு 11 மணிக்குப் பின் திரையரங்கில் படம் பார்க்க அனுமதிக்கப்படக் கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். 

Continues below advertisement