சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளை கலக்கிக்கொண்டு வரும் திரைப்படங்களில் புஷ்பா திரைப்படமும் ஒன்று. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் பாடல் ஒன்றுக்கு பிரபல நடிகை சமந்தா நடனம் ஆடியுள்ளார். ஊ சொல்றியா மாமா என்ற அந்தப் பாடல் பட்டி தொட்டி எங்கும் மெகா ஹிட் அடித்துள்ளது.
இந்தப் பாடலுக்கு பலரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் நடனம் ஆடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தான்ஷானியா நாட்டைச் சேர்ந்த பழங்குடியினத்தவர் ஒருவர் இந்த தெலுங்கு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை தற்போது வரை 1.60 லட்சம் பேருக்கு மேல் லைக் செய்துள்ளனர். மேலும் இந்த வீடியோவை தற்போது வரை 2 மில்லியனிற்கு மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். அத்துடன் பலரும் இந்த வீடியோ தொடர்பான தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். கில்லி பால் என்ற இந்த பழங்குடியின நபர் இந்திய பாடல்களுக்கு நடனமாடுவது இது முதல் முறையல்ல. இவர் ஏற்கெனவே பல்வேறு பாலிவுட் பாடல்களுக்கு நடனமாடியுள்ளார். அந்த வீடியோக்களும் மிகவும் பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: சாக்கு மூட்டைக்குள் சடலமாக நடிகை! உடம்பெல்லாம் காயம் - விசாரணையில் சிக்கும் கணவர்!