Neelima Rani: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சீரியல், திரைப்படங்களில் நடித்த நீலிமா நடிப்புக்கு குட்பை சொல்லிட்டு புதிய தொழிலை தொடங்கியுள்ளார். 


கமல்ஹாசன், சிவாஜி நடிப்பில் வெளிவந்த தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நீலிமா ராணி. தொடர்ந்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய இவர், சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார். இவரின் நடிப்பில் வெளிவந்த ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், அத்திப்பூக்கள், வாணி ராணி, தென்றல், தாமரை, தலையணை பூக்கள் உள்ளிட்ட சீரியல்கள் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் மெட்டி ஒலியும், கோலங்கள் நெடுதொடர் நீலிமா ராணிக்கு பெரிய அடையாளமாக இருந்தது.


சின்னத்திரை மட்டும் இல்லாமல் வெள்ளித்திரையிலும் நடித்து வந்தார். அதில், திமிரு, சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும், சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல படங்களில் முக்கிய ரோல்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த ஆகஸ்ட் 26, 1947 படத்தில் அம்மாவாக நடித்திருந்தார். கிளைமேக்ஸ் காட்சிகளில் சில நிமிடங்களே வந்திருந்தாலும், நீலிமாவின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. 


இந்த நிலையில் நடிப்பில் இருந்து ஒதுங்க தொடங்கிய நீலிமா ராணி சென்னை ஆர்.கே. சாலையில் ‘நேச்சுரல்ஸ் சிக்னேச்சர்’ என்ற புதிய அழகு நிலையத்தை தொடங்கியுள்ளார். இதை பாலடாசியர் எஸ்.பி. பாலசுப்ரமணியமின் மகனும், பாடகருமான எஸ்.பி. சரண் திறந்து வைத்தார். நிகழ்வில் தொழிலபதிபர்கள் இளங்கோவன், வீணா குமரவேல் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து கூறியுள்ளனர். 


நடிகையாக இருந்த நீலிமா ராணி தனது 21வது வயதில் துணை இயக்குனராக இருந்த இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தன்னை விட 10 வயது மூத்தவரை நீலிமா திருமணம் செய்து கொண்டதால் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டார். வயதான தோன்றம் கொண்ட கணவருடன் செல்லும் போது, அவரை அப்பாவா என பலரும் கேள்வி எழுப்பியதாக ஒருமுறை நீலிமா கூறியுள்ளார். எனினும், நீலிமாவின் காதல் திருமண வாழ்க்கையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது புதிதாக அழகு நிலையம் திறந்து இருப்பதால், நீலிமா நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 


மேலும் படிக்க: ARRahman: இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கியும் உள்ளே வரவில்லையா? இதை செய்யுங்க - ஏ.ஆர். ரஹ்மான் டிவீட்


Kannedhirey Thondrinal: 90ஸ் கிட்ஸின் பேவரைட்.. 25 ஆம் ஆண்டை நிறைவு செய்த “கண்ணெதிரே தோன்றினாள்”..!