வெள்ளித்திரை பிரபலங்களுக்கு இருப்பது போலவே சமீபகாலமாக சின்னத்திரை பிரபலங்களுக்கும் பெரியளவில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதனால், சின்னத்திரை பிரபலங்களின் சமூக வலைதளங்களை அவர்களை அவர்களது ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். சமீபகாலமாக, யூ டியூப்பின் செயல்பாடுகளை நன்றாக அறிந்து கொண்ட சின்னத்திரை பிரபலங்கள் சொந்தமாகவே யூ டியூப்-பில் சேனல் வைத்து தங்களது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை பகிர்ந்து வருகின்றனர். இதன்மூலமாக, தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதை காட்டிலும் யூ டியூப் மூலமாக அதிகளவில் சம்பாதித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் கீழ்க்கண்ட நடிகைகள் அதிகளவில் யூ டியூபில் சம்பாதித்து வருகின்றனர்.
- சுஜிதா தனுஷ் :
தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானவர் சுஜிதா தனுஷ். குழந்தை நட்சத்திரமாக திரையில் அறிமுகமாகிய இவர் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பின்னர், சின்னத்திரைக்கு சென்ற இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். இதன்மூலம் இவரது புகழ் உச்சத்திற்கு சென்றது. இவர் “கதைகேளு கதைகேளு” என்று யூ டியூப் சேனல் வைத்துள்ளார். இவரது தொலைக்காட்சிக்கு 5.12 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இவர் தனது யூ டியூப் சேனலில் தனது வித்தியாசமான செயல்கள், பெண்கள் அழகுக்குறிப்பு பொருட்கள் பற்றி பதிவிட்டு வருகிறார்.
- ரித்திகா தமிழ்ச்செல்வி :
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொடர் பாக்யலட்சுமி. இந்த தொடரில் இடம்பெற்ற அமிர்தா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் ரித்திகா தமிழ்ச்செல்வி. இவர் ரித்திகா தமிழ்ச்செல்வி என்ற பெயரிலே யூ டியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்த சேனலில் குழந்தைகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் பற்றி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இவரது சேனலுக்கு இதுவரை 1 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் வரை உள்ளனர்.
- ஹேமா ராஜ்குமார் :
தமிழ்நாட்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொடர் பாண்டியன் ஸ்டோர். இந்த தொடரில் பிரபலமான மீனா கதாபாத்திரத்தில் நடித்தவர் ஹேமா ராஜ்குமார். இவரும் யூ டியூபராக வலம் வருகிறார். இவர் ஹேமாஸ் டைரி என்ற பெயரில் யூ டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். பெண்களுக்கான சமையல் மற்றும் அழகு குறிப்புகளை தொடர்ந்து அவர் பதிவிட்டு வருகிறார். அவரது இந்த யூ டியூப் சேனலுக்கு 7.05 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.
- வனிதா விஜயகுமார் :
மிகவும் பிரபலமான திரைக்குடும்பத்தைச் சேர்ந்தவர் வனிதா விஜயகுமார். பல திரைப்படங்களில் நாயகியாக நடித்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது மூலமாக மிகவும் பிரபலமானார். இவரது நடவடிக்கைகள் சமூக வலைதளங்களில் மிகவும் சர்ச்சையாகியது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த வனிதா விஜயகுமார் சொந்தமாகவே ஒரு யூ டியூப் சேனல் நடத்தி வருகிறார். சமையல் மற்றும் பேஷன் டிசைன் தொடர்பான வீடியோக்களை அவர் பகிர்ந்து வருகிறார். இந்த சேனலில் தற்போது 7.38 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.
இவர்கள் மட்டுமின்றி மேலும் பல சின்னத்திரை நடிகர்கள் மற்றும் நடிகைகள் யூ டியூப் சேனல் மூலமாக அதிகளவில் சம்பாதித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்